உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

டையிடைச் சில போர்கள் நிகழ்ந்துவந்தும், பத்தாண்டிற்கு முன் 40 கோடியாயிருந்த இந்திய மக்கட்டொகை, இன்று 50 கோடியாகப் பெருகியுள்ளது. சென்ற உலகப்போரில் தொடங்கிய உணவுப் பங்கீடு இன்றும் ஒழியாதிருத்தற்கு, மக்கட் பெருக்கமும் ஒரு காரணமாகும். கள்ள விற்பனையும் பொருட் பதுக்கமுமின்றி நேர்மை மிக்க இங்கி லாந்திலும், உணவுப் பங்கீடு தொடர்ந்து வருவதற்கு மக்கட் பெருக்க மன்றி வேறெக்காரண மிருத்தல் கூடும்?

அழிப்புத் தொழிலும் உயிரின ஆக்கத்திற்கு வேண்டியிருத்தல் பற்றியே, அதையும் படைப்புக் காப்பொடு சேர்த்து இறைவனுக்கு முத்தொழில் குறித்ததும்,

நீபா ரதவமரில் யாவரையும் நீறாக்கிப் பூபாரம் தீர்க்கப் புரிந்தா- புயல்வண்ணா! கோபாலா! போரேறே! கோவிந்தா! நீயன்றி மாபா ரதமகற்ற மற்றார்கொல் வல்லாரே?

என்று சகாதேவன் கண்ணனைப் புகழ்ந்ததும் என்க.

இதுகாறுங் கூறியவற்றால், இயந்திரத்தால் நன்மையே மிகுதி யென்றும், ஆரா-ச்சி யில்லாதாரும் பிறரை யேமாற்றிப் பிழைப்ப வருமே அதன் தீமையை மிகுத்துக் கூறுவரென்றும், அறிந்து கொள்க.

பயிற்சி

பின்வருபவற்றைப் பற்றித் தருக்கக் கட்டுரை வரைக:

1. கடவுள் உண்டா?இல்லையா? 2. ஆங்கில ஆட்சியால் இந்தியா விற்கு நன்மையா? தீமையா? 3. மாந்தன் வாழ்க்கை நடைபெறுவது விதிப்படியா? விருப்பப்படியா? 4. கணியம் பார்ப்பது நல்லதா? தீயதா? 5. தன்மூப்பாட்சி (Autocracy or Dictatorship) எல்லாவிடத்துந் தீயதா? 6. இரப்போர்க் கீதலெல்லாம் அறமாகுமா? 7. சரித்திரம் பொது இலக்கியத்தைச் சேர்ந்ததா? தனிக் கலையா? 8. ஒரு மக்களின் தொகுதி யாக முன்னேறும்போது தனிப்பட்டவன் நிலை அதைத் தாக்குமா? 9. மாணவர்க்குப் பரிசளிப்பது நன்றா? தீதா? 10. நூலாக்கத் திற்கு வேண்டும் தூண்டுதல் அகத்ததா? புறத்ததா? 11. மாணவர்க்குத் தேர்வு நடாத்துதல் தக்கதா? தகாததா? 12. கொலை எல்லாவிடத்துங் குற்றமா? 13. பழமொழிகள் எல்லாம் நன்னடத்தையைத் தூண்டுமா? 14. இந்தியாவிற்குப் பொது மொழியாகத் தக்கது ஆங்கிலமா? இந்தியா? 15. தமிழிற் பிறமொழி