உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

151

கலத்தல் நன்றா? தீதா? 16. மதம் மக்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையா? 17. மரக்கறியூண் அருளுடை மையின் அறிகுறியா? 18. தமிழிற் பிறமொழி யெழுத்துகளைச் சேர்த்தல் வேண்டுமா? வேண் டாவா? 19. உடன் கல்வி (Co-education) தகுமா? 20. இனவுணர்ச்சி நல்லதா? 7. ஆரா-ச்சிக் கட்டுரை

தமிழன் பிறந்தகம்

உலகத்திற் பல மக்களினத்தின் பிறந்தக வரலாறுகள் வரையப் பட்டும் ஒப்புக்கொள்ளப்பட்டும் உள்ளன. தமிழன் பிறந்தக வரலாறு, இன்றும் பலரால் அறியப்படாமலும், சிலரால் அறியப்பட்டும் பிறரால் ஒப்புக்கொள்ளப்படாமலும், உள்ளது. தமிழன் பிறந்தகம் பற்றிய வரலாற்று நூல் இதுவரை எதுவும் இல்லாவிடினும், அதை அறிதற்கு வேண்டும் சான்றுகள் தமிழ்மொழியிலும் இலக்கியத்திலும் இல்லாம லில்லை.

தமிழ்மொழியானது, திரவிடம் என்னும் குடும்பத்தைச் சேர்ந்த தாகும். இக் குடும்பம் இந்தியாவிலேயே உள்ளது. இந்தியாவுள்ளும், தெற்கே செல்லச் செல்லத் தூ-மையாகவும், வடக்கே செல்லச் செல்லத் திரிந்தும் உள்ளது. தென்கோடியிலுள்ள தமிழுங்கூட, தென் பாற் செல்லச் செல்லச் செந்தமிழாகவும், வடபாற் செல்லச் செல்லக் கொடுந் தமிழாகவும் வழங்குகின்றது. பண்டை நாளில் முத்தமிழ் நாடுள்ளும் பாண்டிநாடே தமிழ்நாடென்றும், முத்தமிழ் வேந்தருள் ளும் பாண்டி யனே தமிழ்நாட னென்றும், சிறப்பித்துச் சொல்லப் பட்டனர். பாண்டி நாடு செந்தமிழ்நாடா யிருந்ததினாலேயே பாண்டியர் சிறந்த தமிழ்ப்பற் றுடையராயிருந்து, முத்தமிழ்க் கழகங் களையும் வளர்த்து வந்தனர்.

(6T

பழந்தமி ழிலக்கியத்திற் கூறப்பட்டுள்ள முதல் கரு வுரி யென்னும் மூவகைப் பொருள்களையும் நோக்கின், அவை யாவும் இத் தென்னாட் டிற்கே யுரியவையா யிருக்கின்றன; அதோடு, பிற நாட்டிற்குச் சிறப்பா யுள்ள எதுவுங் கூறப்படவில்லை.

முதலாவது, முதற் பொருளை நோக்குவோம். குறிஞ்சி முல்லை மருதம் நெ-தல் பாலை என்னும் ஐவகை நிலமும், இளவேனில் முது வேனில் கார் கூதிர் முன்பனி பின்பனி என்னும் அறுவகைப் பெரும் பொழுதும், தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ளபடியே இன்றும் நிலவுகின்றன.