உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

இரண்டாவது, கருப்பொருளை நோக்குவோம். குறிஞ்சிநிலத்துச் சேயோன் என்னும் முருக வணக்கமும், முல்லைநிலத்து மாயோன் என்னும் திருமால் வணக்கமும், பாலைநிலத்து மாயோள் என்னும் காளி வணக்கமும், மருதநிலத்து வேந்தன் இந்திரன் என்னும் வணக்கமும் நெ-தல்நிலத்து வாரணன் வருணன் என்னும் வணக் கமும், ரியர் வருகைக்கு முந்திய தொன்றுதொட்டு இத் தென்னாட் டிற்கு அல்லது பனிமலை வரை பரவியுள்ள திரவிட இந்தியாவிற்கு உரியவையே. வை ஆரிய வணக்கமெனக் கொள்ளுதல் தவறாகும். இவற்றுள், முன்னைய மூன்றும் இத் திணைமயக்கக் காலத்தில் பல நிலத்தும் பரவியுள்ளன; பின்னைய விரண்டும் வழக்கிறந்தன. தமிழரின் பழைமையான இடப்பெயர் குடிப்பெயர்களும், உணவுப் பொருள்களும் ஆடையணிகளும் தொழில்களும் பலவகைக கருவி களும் பழக்கவழக்கங்களும்; தமிழ்நாட்டு மரஞ் செடி கொடிகளும், நீருயிரிகளும், ஊர்வனவும் விலங்குகளும், பறவைகளும்; இன்னோ ரன்ன பிறவும்; தொன்னூல்களிற் சொல்லப்பட்டபடியே, இன்றும் தமிழ்நாட் லிருந்துவருகின்றன. அசுணம் யாளி முதலிய விலங்கு களும், ஆண்டலைப்புள் எண்காற் புள் முதலிய பறவைகளும், இறந்துபட்டன.

மூன்றாவது உரிப்பொருளை நோக்குவோம். காதற் பருவமும், களவு கற்பு என்னும் கைகோள் முறையும், இல்லற வாழ்க்கைக் காதற் செயல்களும், முதனூலெழுந்த அன்றும் இன்றும் ஒரேபடியா யுள்ளன.

இனி, பழந்தமிழிலக்கியத்தில் ஆங்காங்குள்ள வரலாற்றுக் குறிப்பு களை நோக்கின், அவை யாவும், இத் தென்னாட்டையும் இதற்குத் தெற்கில் அமிழ்ந்துபோன குமரிநாட்டையுமே, தமிழ்நாடாகக் குறிக்கின்றன. தலைச்சங்கமிருந்தது தென்மதுரை யென்றும், அந் நகர் பஃறுளி யாற்றங்கரையி லிருந்ததென்றும், முச்சங்க வரலாறுகளெல் லாம் குறிக்கின்றன. தெற்கே பஃறுளி என ஓர் ஆறிருந்தமையைக் கடைச் சங்க காலத்துப் புலவரான நெட்டிமையாருங் குறிக்கின்றார் (புறம். 9). பஃறுளியாற்றிற்கும் அதற்கு வடக்கில் கடல் கொள்ளப்பட்ட குமரி யாற்றிற்கும் இடையேயுள்ள தொலைவு, எழுநூற்றுக் காதவழி யென்று சிலப்பதிகார விரிவுரை யாசிரியரான அடியார்க்குநல்லார் கூறுகின்றார். ஒரு காதம் மூன்று கல்லாகக் கொள்ளின், அவ் ஈரியாற்றிற்கும் இடையே