உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

153

2100 கல் தொலைவிருந்ததாக அறியப் படும். பதினெட்டு நூற்றாண் டிற்கு முந்தியவரும், சேரன் செங்குட்டு வனின் இளவலாரும், நடுநிலை திறம்பாத முற்றத்துறந்த முழு முனிவருமாகிய இளங்கோவடிகள்;

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு

தென்றிசை யாண்ட தென்னவன் வாழி

(சிலப். 11:19-22)

என்று கூறியிருப்பதால் பஃறுளியாற் றுண்மை வலியுறுவதோடு, அது கங்கை போலும் ஒரு பேரியாறு என்பதும், அது பிறந்த மலை பனிமலை போலும் ஒரு பெருமலை யென்பதும் பெறப்படும்.

தலைச்சங்கமிருந்த

பாண்டியன் தலைநகரான தென்மதுரை பஃறுளியாற்றங் கரையி லிருந்ததாயின், அதற்குத் தெற்கிலும், நிலமும் பாண்டிநாட்டுப் பகுதியும் இருந்திருத்தல் வேண்டும். அங்ஙனமா யின், கிளேற்றர் (Sclater), வாலேசு (Wallace) முதலிய மேனாட்டா ரா-ச்சியாளர், சரித்திரத்திற்கு முந்திய பழங்காலத்தில் இந்தியா வையும் ஆத்திரேலியாவையும் ஆப்பிரிக்காவையும் இணைத்துக்கொண் டிருந்து, பின்பு மூழ்கிப்போனதாகக் கூறும் 'லெமுரியா' (Lemuria) என்னும் பெருநிலப் பரப்பும்; குமரிநாடாகிய பழம் பாண்டிநாடும் ஒன்றேயாதல் வேண்டும். பெரும்பாணாற்றுப்படையில், யவனர் பா-மரத்திலிட்ட விளக்கிற்கு உவமை கூறப்பட்டுள்ள காரன்னம், இன்று தமிழ்நாட்டி லில்லாமலும் தாசுமேனியா (Tasmania)த் தீவிற்கே யுரியதாயு மிருப்பது; பழங்காலத்தில் அத் தீவிற்கும் தமிழ்நாட்டிற்கு மிருந்த தொடர்பைப் புலப்படுத்தும்.

இனி, குமரிநாட்டையே மாந்தன் பிறந்தகமென்று மேனாட் டாரா-ச்சியாளர் குறிப்பதாலும் தென்னரைக்கோளப் பழங்குடி மக்க ளெல்லாம் முந்தியல் (primitive) மாந்தரா யிருப்பதாலும், தமிழரும் பழைமையான இனமாயும் பல முந்தியற் கூறுகளுடையராயு மிருத்த லாலும் தமிழன் பிறந்தகம் குமரிநாடே என்று துணியப்படும். எளிய மொழியொலி யுடைமையும், இயற்கைப் பேதைமையும், மகளிர் காது வளர்த்தலும், பிறவும், தமிழரின் முந்தியன்மைக் கறிகுறியாம். இன்றும், பாண்டிநாட்டுத் தமிழர்க்கு 'ஜ ஷ க்ஷ' முதலிய வடமொழி வல்லொலி