உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கள் பலுக்க (உச்சரிக்க) வருவதில்லை. இலக்கியத்தில், வள்ளைத் தண்டை மகளிர் காதிற்கு உவமை கூறியிருத்தலும், கனங் குழை கொடுங்குழை எனக் காதணிகள் குறிக்கப்பட்டிருத்தலும், தமிழ் மகளிர் பண்டைக் காலத்திலும் காது வளர்த்திருந்தமையைத் தெரிவிக்கும்.

தமிழர் வடநாட்டினின்று வந்தவராயின் வந்த புதிதிலாவது வெள்ளையரா யிருந்திருத்தல் வேண்டும். மேலும் அவ் வடநாட்டி லேயே தூய தமிழ் வழங்கியதாயும், தமிழின் தொன்னிலைகளை யறியக்கூடிய நிலைமை யுள்ளதாயும் இருத்தல் வேண்டும். அங்ஙன மில்லாமையானும், தென்னாட்டிற்கும் வெப்ப மண்டலத்திற்கு முரிய பொருள்களே பண்டை இலக்கியத்திற் கூறப்பட்டிருத்தலானும், குமரி நாடே தமிழன் பிறந்தகம் என்பது முடிந்த முடிபாம்.

பயிற்சி

பின்வருபவற்றைப்பற்றி ஆரா-ச்சிக் கட்டுரை வரைக:

1. அகத்தியர் வரலாறு. 2. தொல்காப்பியர் இனம். 3. வள்ளுவர் மதம். 4. இந்திய நாகரிகம் தமிழரதா? ஆரியரதா? 5. இராமாயணம் உண்மைக் கதையா? கட்டுக்கதையா? 6. சேரன் வஞ்சி எது? 7. வீணை தென்னாட்டுக் கருவியா? வடநாட்டுக் கருவியா? 8. வடமொழிக் கலப்பால் தமிழ் தளர்ந்ததா? வளர்ந்ததா? 9. 'கல்வியிற் பெரியவன் கம்பன்' என்பது சரிதானா? 10. மாணிக்கவாசகர் காலம்.

குறிப்பு: ஆரா-ச்சிக் கட்டுரைகள், வகுப்பறையிலும் தேர்வுக் கூடத்திலும், ஒருமணி நேரத்திற்குள் எழுதப்பெறுந் தரத்தனவல்ல; நீண்டகாலம் கொடுக்கப்பெற்று ஆந்தோ-ந் தெழுதப்பெறும் பரிசுப் போட்டிக் கட்டுரைகளாகும்.

8. அங்கதக் கட்டுரை

i. செம்பொருளங்கதம்

மறுமலர்ச்சி

மறுமலர்ச்சியாவது திரும்ப மலர்தல். ஒரு நாட்டில் இலக்கியக் கல்வி முற்றும் வழக்கற்றுப் போ-ச் சில பல நூற்றாண்டின் பின் மீண்டும் புத்துயிர் பெற்றெழுமாயின், அது மறுமலர்ச்சி யெனப்படும். 14ஆம் 15ஆம் 16ஆம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய நாடுகளில், சிறப்பாக