உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

155

இங்கிலாந்தில், பழைய இலத்தீன் கிரேக்க இலக்கியக் கல்வி புதுப்பிக்கப்பெற்று மறுமலர்ச்சி (Renascence) எனப் பெயர் பெற்றது. தமிழ்நாட்டில் இதுபோது ஒருவகை மறுமலர்ச்சி தோன்றியுள்ளது. பழந்தமி ழிலக்கியக் கல்வி இன்று புதுப்பிக்கப்பெற்று பலராலும் கற்கப்பெறின் அதற்கு மறுமலர்ச்சி யென்னும் பெயர் பொருந்துவ தாகும். ஆயின், பழந்தமிழிலக்கியத்திற்கு மாறான போக்கில் புத்திலக் கியம் இயற்றப்பெறுவதே, இன்று மறுமலர்ச்சி யென்னும் பெயர் பெற்றுளது.

ஒரு நாட்டில் இலக்கியம் சிறந்த முறையில் வளர வேண்டு மாயின், அது சிறந்த புலவர் பொறுப்பிலிருத்தல் வேண்டும். தமிழ் நாட்டில் மறைமலையடிகள், திருவாளர் கலியாணசுந்தர முதலியார், பண்டிதமணி கதிரேசச் செட்டியார், இளசைகிழார் சோமசுந்தர பாரதியார், திருவாளர் ஆறுமுக முதலியார், டாக்டர் வரதராசனார், டாக்டர் சிதம்பரநாதன் செட்டியார், சொல்லின் செல்வர் சேதுப் பிள்ளை முதலிய பல பெரும் புலவரிருந்தும், அவரைச் சற்றும் மதிக் காமல், தமிழுக்குத் தாமே அதிகாரிகள் என்று சொல்லிக்கொண்டு ஒரு தான் றோன்றிப் புலவர் கூட்டம் கிளம்பியுளது.

சிலர் தமிழெழுத்துகளைக் கற்ற அளவிலேயே தமக்கு எழுத் தாளர் என்று பட்டஞ் சூட்டிக்கொண்டு, சில மாதகாலம் ஒரு சிறு செ-தித் தாளாசிரியராயிருந்து, பின்பு சிறந்த தமிழதிகாரிகளாகி விடுகின்றனர்.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

என்று ஒளவையாரும்,

எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு

என்று வள்ளுவரும் கூறியவற்றில், எழுத்து என்பது ஆகுபெயரா- இலக்கியத்தைக் குறிக்கும். இலக்கிய நடையில் இலக்கணப் பிழை யின்றி எழுதுபவர், எழுத்தாளர் (Men of Letters) எனப் பெறுவர். ஆனால், மறுமலர்ச்சி யெழுத்தாளரோ, இலக்கணங் கற்காமலே நூலாசிரியராகி, வேண்டா வடவெழுத்தும் வடசொல்லுங் கலந்தும், வழூஉச் சொற் புணர்த்தும் மரபைச் சிதைத்தும் ஒரு வாக்கியத்தை ஒரு சொல்லாற் குறிக்கும் தொலைவரி (தந்தி) நடை இடையிடை யமைய எழுவா- பயனிலை யிசைவின்றிப் புணர்ச்சிப் பிழைபட வரைகின்றனர்.