உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

சிலர் மோனையெதுகை யறிந்தவுடனும், சிலர் அகவல் யாப்பும் விருத்த யாப்புங் கற்றவுடனும், தம்மைப் பாவேந்தராக மதித்துக் கவிஞர் என அழைத்துக்கொண்டு, பெரும்புலவரையும் பொருட்படுத் தாமல், வா-க்கு வந்தபடி உரைப்பதும் கைக்கு வந்தபடி வரைவதுமா யிருக்கின்றனர்.

சிலர் சுவைஞர் (ரசிகர்) என்னும் ஒரு புதுக் கூட்டமாகச் சேர்ந்து தமிழிலக்கணத்திற்கு மாறாகச் சொற்களைப் புணர்ப்பதும், பண்டை யிலக்கியத்தில் தமக்கு வேண்டாத செ-யுள்களை யெல்லாம் விலக்கு வதும், தொழிலாகப் பூண்டுள்ளனர்.

சிலர் தமிழ்ச் சீர்திருத்தாளராகக் கிளர்ந்து எழுத்தைச் சீர்திருத்து வாரும் நடையைச் சீர்திருத்துவாரும் இலக்கணத்தைச் சீர்திருத்து வாரும் இலக்கியத்தைச் சீர்திருத்துவாருமா-ப் பல்வறுே குழுவின ரா-ப் பிரிந்து, தத்தமக்குத் தோன்றியவாறெல்லாம் தமிழைக் குலைத்து வருகின்றனர். இதை நோக்கும் போது,

'குட்டுதற்கோ பிள்ளைப் பாண் டியனிங் கில்லை

குறும்பியள வாக்காதைக் குடைந்து தோண்டி

எட்டினமட் டறுப்பதற்கோ வில்லி யில்லை

யிரண்டொன்றா- முடிந்துதலை யிறங்கப் போட்டு

வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்த னில்லை

விளையாட்டா-க் கவிதைதனை விரைந்து பாடித் தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைக ளுண்டு தேசமெங்கும் புலவரெனத் திரிய லாமே"

என்னும் படிக்காசுப் புலவர் செ-யுளே நினைவிற்கு வருகின்றது.

ஒருவர் ஒரு மொழியின் இலக்கண இலக்கியப் பயிற்சியின்றியே அதில் சிறப்பாக எழுதும் ஆற்றல் பெறமுடியுமேனும், இது எல்லார்க்கும் இயல்வதன்றாகலின், முறைப்படி அப் பயிற்சியைப் பெறுவதே தக்கதாம். மேலும், ஒரு மொழியில் தேர்ச்சிபெற்றுத் தேறுதற்குரிய தேர் வொழுங்கு இருக்கும்போது, அதைப் பொருட்படுத்தாதது போற்றத் தக்கதன்று. ஆங்கிலத்தில் மட்டும் தேர்ச்சியைக் காட்டு தற்குத் தேர்வு கட்டாயமா- வேண்டப்படும்போது, தமிழில் ஏன் அது புறக்கணிக்கப்படல் வேண்டும்? ஒருவர் தாமாக எவ்வளவுதான் கற்றிருப்பினும், தேர்வுக்கல்வி வேறு; தேர்வு