உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

வருகின்றனர். பண்டைத் தமிழ் மக்களும் ஊணிலும் விருந்திலும் மதுவுண்டு மகிழ்ந்தமை, பழந்தமி ழிலக்கியத்திற் பரக்கக் கூறப்பட்டுள்ளது.

மதுநீர் உணவாவதுடன், சில நோ-கட்குச் சிறந்த மருந்து மாகின்றது. இருமல் நோயாளிகட்கு முந்திரிச் சாறாயத்தை அல்லது பட்டைச் சாறாயத்தைக் கொடுப்பது வழக்கம். குழந்தைகட்குச் சிற்றளவாக அதைக் கொடுத்து வந்தால், நெஞ்சு உரம்பெறும் என்பர் நாட்டு மருத்துவர். மதுவிலக்குள்ள இந் நாட்டிலும், மதுவானது மருந் தாக விற்கப் பெறுமாயின், அதன் அருமையைச் சொல்லவும் வேண்டுமோ?

இவ் வுலகத்தில் குடிகாரன்தான், தான் தேடியதை முற்றும் நுகரக் கொடுத்து வைத்தவன்.

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் து-த்தல் அரிது

என்றார் தெ-வப்புலமைத் திருவள்ளுவர். ஒருவன் நெற்றியின் வேர்வை நிலத்தில் விழப் பாடுபட்டுத் தேடுவது எதற்கு? நுகரத் தானே? தான் தேடியதைத் தானும் நுகராது பிறரையும் நுகர்விக்காது போர் காத்த நா-போற் போகின்றவன், கழிபெரு மூடனல்லனோ? வருந்தித் தேடியதை வருந்திக் காத்து வருந்தியிழப்பவன் எத் துணைக் கொடும் பாவியா யிருத்தல் வேண்டும்?

குடிகாரன் ஈகையாளியு மாகின்றான். குலமத வேறுபாடு நோக் காதும் கைம்மாறு கருதாதும் பெற்றதைப் பிறரொடு சேர்ந்துண்ணும் பெருந்தகைமை, குடியினால் உண்டாகின்றது. செல்வத்துப் பயன் ஈதலன்றோ?

குடியினால் எவருக்கும் மறம் (வீரம்) பிறக்கின்றது. குடிகாரன் தான் விரும்பிய செயலைத் துணிந்து செ-துவிடுகின்றான். இங்ஙனம் விரும்பியதைச் செ-யும் ஆற்றல் இயல்பாகத் தேவருக்குத்தான் உண்டு. மக்களுக்கு இன்றியமையாத குணங்களுள் மறமும் ஒன்றாகும். இது பொதுவா-ப் பிறப்பில்தான் அமையும். கோழையராகப் பிறந்த மக்களையும் கடுங்கண் மறவராக்கும் ஆற்றல் கட்குடிக் கிருக்கு மாயின், கள்ளின் ஆற்றல் கடவுளாற்றலன்றோ?

குடிகாரன் சிறந்த மறவனானபோதும் தாழ்மையை மேற் கொள் வது, மிகமிகப் பாராட்டத் தக்கது. கல்வி செல்வம் அதிகாரம் முதலிய