உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

இலக்கியத்தால் மட்டுமோ? வருவாயாலும் குடியானது ஒரு நாட்டை எவ்வளவு வளம்படுத்துகின்றது! குடியால் வரும் அரசிறை வருமானம் எத்தனை கோடி!

இவ்வாறு கள்ளானது பலவகையிலும் தனிப்பட்டவர்க்கும்

நாட்டிற்கும் பெரும்பயன் விளைக்கும் பெற்றி நோக்கியே அதிகமா னிறந்தவுடன், 'சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்' என்னும் உத்திபற்றி,

சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே

பெரியகட்

பெறினே

யாம்பாடத் தான்மகிழ் ந்துண்ணு மன்னே

(புறம்.235)

என்று கையறை பாடினார் ஔவையாரும். குடியின் பெருமையை உணர்ந்தவரெல்லாம், ஒரு நாட்டிற் குடியிருந்தாற் குடியிருப்பர்; குடிபோனாற் குடிபோவர். கள்ளானது மக்கட்கு மட்டுமன்று, தேவ ருக்கும் விருப்பமானதென்று மறைகள் கூறும். 'செங்கண்ணன்' 'செந் தாமரைக் கண்ணன்' என்று தேவரையும் அரசரையும், செவ்வரி பரந்த கண்ணார் என்று சிறந்த மகளிரையும், புகழ்ந்து கூறும் மரபு, அவர்க்குக் கட்குடியால் நேரும் கட்செம்மை நோக்கிப் போலும்!

இனி, குலத்தின் நலத்தை உயர்குடி பெருங்குடி முதுகுடி நன்குடி என்னும் சொற்களாற் குறிப்பதும்; அவற்றின் இரட்டுறலாற் பெறும் பெருமை நோக்கிப் போலும்!

இத்துணைப் பெருமை வாந்த குடியின் அருமையை உணராது, அமெரிக்கர் மதுவிலக்கினர். பின்பு, தம் தவற்றை யுணர்ந்து அதைத் தவிர்த்தனர்.

“ஊக்கமது கைவிடேல்” என்பது ஔவையார் பொன்மொழி.

அதைக் கடைப்பிடிக்க.

பயிற்சி

பின்வருபவற்றைப் பற்றி அங்கதக் கட்டுரை வரைக:

1. சில கடன்காரர் செ-யும் கொடுமை. 2. கையூட்டு (லஞ்சம்) வாங்கல். 3. ஏழையைக் கவனியாமை. 4. செல்வச் செருக்கு.