உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

9. புகழ்ச்சிக் கட்டுரை

i. செம்பொருட் புகழ்ச்சி

ஆங்கிலர் பண்பாடு

161

உயிரினத்தில் மாந்தன் உயர்ந்தவன். ஆயின், மாந்த வுடம்பு பெற்றமட்டில் ஒருவன் மாந்தனாகிவிடான். உடம்பில் திருந்தியது போன்றே உள்ளத்திலும் திருந்தியவன்தான், உண்மையான மாந்த னாவன். இவ் வுண்மை யறிந்தே, மாந்தரைப் பண்பாடுடைமையும் இன்மையும்பற்றி மக்களென்றும் மாக்களென்றும், இருவகையா - வகுத்தனர் பண்டைத் தமிழிலக்கணியர்.

உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே அஃறிணை யென்மனார் அவரல பிறவே

மாவும் மாக்களும் ஐயறிவினவே

பிறவு முளவே அக்கிளைப் பிறப்பே

மக்கள் தாமே ஆறறி வுயிரே

பிறவு முளவே அக்கிளைப் பிறப்பே

என்று தொல்காப்பியரும்,

விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்

கற்றாரோ டேனை யவர்

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்

என்று திருவள்ளுவரும், கூறுதல் காண்க.

பண்டைக் காலத்தில் தமிழர் பண்பாடடைந்திருந்தனர்! பின்பு, பிறநாட்டார் கலப்பால் அப் பண்பாடொழிந்தது. இன்று பண்பா டடைந்துள்ளவர் மேனாட்டாரே. அவருள்ளும் சிறந்தவர் ஆங்கிலரே.

இங்கிலாந்தின் தனிநிலையும், அதன் இனிய தட்பவெப்ப நிலை யும், அங்குள்ள அழகிய பைம்புல் வெளிகளும், ஆங்கில அறிஞரின் பயிற்றலும், ஆங்கில அரசியலமைப்பின் சீர்மையும், அதனால் ஏற்பட்டுள்ள பல பொதுநலச் சட்டங்களும், இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வியும், எல்லார்க்கும் வேலையும் ஊணும் கிடைத்தலும், ஆங்கில மக்கள் படிப்படியாகத் திருந்தி இற்றைப் பண்பாடடைந் திருப்பதற்குக் காரண