உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

மாயின. அவர் பண்பாட்டுக் குணங்களிற் பல மேனாட்டார்க்கெல்லாம் பொதுவேனும், ஆங்கிலரை இந்தியருடன் ஒப்பு நோக்கியதே இக் கட்டுரை யாதலின், அவற்றைப் பற்றிய கூற்றில் அதிவியன்மை (அதிவியாப்தி)க் குற்றந்தங்கா தென்க.

ஆங்கிலர் எக்காரியத்தையும் காலந்தவறாமற் செ-கின்றனர். குறித்த நேரத்திற்கும் குறித்த வேளைக்கும் குறித்த நாளுக்கும், அவர் கருத்துப்படி வேறுபாடுண்டு, நமக்கோ அவ் வேறுபாடில்லை. காலையிற் செ-ய வேண்டியதை மாலையும், மாலையிற் செ-ய வேண்டி யதை மறுநாட் காலையும், செ-கின்றோம். நேரந்தவறாமை வேளை தவறாமை, அவர் வாழ்க்கையில்தான் காணமுடியும். இங்கிலாந்தி லுள்ள புகைவண்டி நிலையங்களில், வண்டி வருகிறதற்குச் சற்று முந்தி வழிப்போக்கர் கூடுவதும், வண்டி சென்றபின் நிலையத்திலுள்ள வேலையாளரைத் தவிர வேறொருவரையுங் காண முடியாமையும், எத்துணை ஒழுங்கா யிருக்கின்றன!

ஆங்கிலர் ஒரு நிமையத்தையும் வீண் போக்குவதில்லை. ஒவ்வொரு வினைக்கும் ஒரு நேரத்தையும் ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு வினையையும் திட்டஞ் செ-துகொண்டு அத் திட்டப்படியே தங் காரியங்களைச் செ-து வருகின்றனர். உறவினரோடு அளவளாவி உரையாடுவதைக்கூட, உண்பொழுதிலும் உலாப்பொழுதிலும் நிகழ்த்து கின்றனர். பயனில்சொல் பாராட்டுதல் என்பது அவருக்குத் தெரி யவே தெரியாது. காலத்தின் அருமையைக் கண்டு வீண்பொழுதை யும் மாண்பொழுதாக்கும் வினைத்திறம், அவரிடத்தில்தான் உண்டு.

ஆங்கிலர் ஓரிடத்திற்குச் செல்லுங்காலும் ஒரு கட்டடத்திற்குள் நுழையுங்காலும், சிறியோர் பெரியோர் என்னும் வேறுபாடின்றி, முன்பின் வரவு முறைப்படி வரிசையா- நிற்றலும் செல்லுதலும், எத்துணை அழகிய காட்சியாகும்! நாமோ, வண்டி புறப்பட ஒரு மணி நேரமிருந்தும், உள்ளிருந்தும் வெளியே வருபவரை வரவிடாமல் வழியடைத்து, போர்க்களத்திற் பொரு பவரைப்போல, ஒருவரை யொருவர் நெருக்கிக்கொண்டும் தள்ளிக் கொண்டும், வாசல் வழியும் பலகணி வழியும் ஒரே கூண்டிற்குள் நூற்றுக் கணக்கினரா- நுழைவது, எத்துணை அலங்கோலமா யிருக்கின்றது!

நேர்மையென்பது ஆங்கிலரின் பிறவிக்குணம். குற்றவாளி யாராயிருப்பினும் குற்றத்திற்குத் தகத் தண்டிப்பதும், விண்ணப்பக் காரரின் தகுதியறிந்து தகுதியறிந்து வேலையளிப்பதும், கையூட்டு வாங்காது