உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

163

டி

கடமையைச் செ-வதும் அவருக்கு இயல்பான காரியங்கள். 'பிரிட் நீதியும் பிரெஞ்சு வீதியும்' என்பது ஆங்கிலரின் நீதியைக் குறிக் கும் பழமொழியாகும். நம் நாட்டிலோ, வேண்டியவனுக்கே வேலை கொடுப்பதும், வேண்டியவன் தகுதிக்கேற்ப விதிகளமைப்பதும்,

வேண்டியவனை உள்ளத்தில் அமர்த்திவிட்டு, வெளித்தோற்றத்திற்கு விளம்பரஞ் செ-வதும், வழக்கமாயிருக்கின்றன.

நேர்மை யுள்ளவர்க்கெல்லாம் வா-மை தானே அமைந்து விடும். உண்டிச் சாலைகளில் உண்டவர் தாமா-க் காசு கொடுத்தா லன்றி அவரைக் கேளாமையும், ஆளில்லாத செ-தித்தாட் கடை களில் தாள் வேண்டுவோர் தாளை யெடுத்துக்கொண்டு காசை வைத்து விட்டுச் செல்லுதலும், கல்லூரித் தேர்வுக் கூடங்களில் வினாத்தாளைக் கொடுத்து விட்டு ஆசிரியர் சென்றுவிடுவதும், இங்கிலாந்திலன்றி இந்தியாவில் நிகழமுடியுமோ? கோயில்களிலுள்ள காணிக்கைப் பெட்டிக்கும் பல அலிகார்ப் பூட்டுகளிட்டுப் பூட்டி வைப்பது, இந்தியரின் எத்தகைய இயல்பைக் காட்டுகின்றது?

ஆங்கிலர்க் கமைந்துள்ள இயற்கைக் குணங்களுள், அமர்ந்து வினைசெயலும் ஒன்றாகும். நிலமும் நீரும் நிலைமாறினும், அண்டங் களெல்லாம் அடுக்குக் குலையினும், ஆங்கிலர் தாம் செ-ய வேண்டு வதை அமைந்து எண்ணி ஆற அமரச் செ-கின்றனர். இந்திய ரோ, இத்தகை நிலையில், 'புலனைந்தும் பொறி கலங்கி’ப் பொன்றி விடுவர்.

ஆங்கிலரின் வேறோர் அருங்குணம் நெறிமுறைமை. கடந்த உலகப்போரில் சர்ச்சிலைத் தலையமைச்சராக்கி, அது முடிந்ததும் அவரை விலக்கியது, ஆங்கிலர் ஆள்களையன்றிக் கோட்பாடு களைப் பற்றுபவர் என்பதைப் புலப்படுத்தும்.

இங்கிலாந்தில், இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வி, பள்ளிச் சிறார்க் கிலவச வுண்டி, ஏழையரில்லம், வேலையின்மையை விலக்கல், முதுமைச் சம்பளம், இறப்புவரி, நூலக வாசக சாலைகளிற் பேசாமை முதலியனவெல்லாம், ஆங்கிலரின் பிறர்நலம் பேணுந் திறத்தைப் பெரிதும் விளக்கிக் காட்டும்.

ஆங்கிலருள் சிறப்பாக இலண்டன் மாநகர வூர்காவலர் உண்மை உழைப்பு உதவிசெ-தல் பொறுமை பொறை தாழ்மை சுறுசுறுப்பு முதலிய அருங்குணங்கட்கு, உலகப் புகழ் பெற்றவராவர்.