உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

இத்தகை உயர்ந்த பண்பாடுள்ள ஆங்கிலரின் நெருங்கிய தொடர்பு, நமக்கு மூன்று நூற்றாண்டுகளாக வா-த்திருந்தும் பன்னா டை போல் அவர்களின் உயர்குணங்களைப் பின்பற்றாது, காப்பி குடித் தலையும் காற்சட்டை யணிதலையுமே மேற்கொண்டுள்ளோம். இது நமக்கு நாணுத் தருவதாகும். ஆதலால், இனிமேலாயினும், அவர் களின் உயரிய வொழுக்கத்தைப் பின்பற்றுவோமாக.

ii. வஞ்சப் புகழ்ச்சி

காந்தியடிகளின் தேசியத் தொண்டு

இந்தியாவின் தேசியத் தந்தையாரென்றும், இந்திய மீட்ப ரென்றும், காந்தியடிகளை எல்லாரும் புகழ்வர். ஆனால், உலகில் தேச மீட்பர் அவர் ஒருவர் மட்டுமல்லர்; எத்தனையோ பலர் உண்டு.

காந்தியடிகளைப் புகழ்பவரெல்லாம், அவரது தேசியத் தொண் டையே நோக்குகின்றனர்; அதனால் பல வகுப்பார்க்கு விளைந்த கேட்டையும் வருத்தத்தையும் கவனிப்பதில்லை.

பல

முதலாவது ஆங்கிலரை எடுத்துக்கொள்வோம், இந்தியத் தேசிய யக்கத்தைச் சேர்ந்தவரெல்லாம் கதராடையணியும்படி காந்தியடிகள் செ-துவிட்டதனால், இங்கிலாந்திற் சில நெசவுச் சாலைகள் மூடப் பட்டு, பல தொழிலாளிகள் வேலையிழந்தனர். தேசியவுணர்ச்சி காரணமாகப் இந்தியர் இந்தியச் செ-பொருள்களையே வாங்கத் தலைப்பட்டதனால், ஆங்கிலச் செ-பொருள்களின் இறக்குமதி குறைந்து, பல ஆங்கில வணிகரின் வருமானங் குன்றிவிட்டது. தேசிய இயக்கம் வலுக்க வலுக்க, இந்திய அரசியல் அலுவல்கள் படிப்படியா- இந்தியர்க்கே கொடுக்கப்பட்டன. இறுதியில், இந்தியா முழுவிடுதலை யடைந்தவுடன், ஆங்கிலர்க்கு இந்திய அலுவற்பேறு அடியோடு நின்றுவிட்டது. இதனால், எத்துணையோ ஆங்கிலர்க்கு அதிகாரமும் வருமானமும் இல்லாதுபோயின. அவர்க்கு எத்துணை வருத்தம் உண்டாயிருக்கும்! இங்ஙனம் பொருளிழப்பு மட்டுமா? உயிரிழப்பும் ஒருசிலர்க்கு நேர்ந்ததே! இந்தியப் பேரரசை யிழந்தது இங்கிலாந்திற்கே ஒரு பெருந் துன்பமன்றோ?

இரண்டாவது இந்தியரையே எடுத்துக்கொள்வோம். தேசிய இயக்கத்திற் சேர்ந்ததனால், எத்தனை பேர் அடியுண்டு சிறையுண்டு இடர்ப்பட்டனர்! எத்தனை பேர் படிப்பிழந்தனர்! எத்தனை பேர் வேலை யிழந்தனர்! எத்தனை பேர் உயிரிழந்தனர்! எத்தனை பேர் கணவனும்