உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

165

தந்தையும் போன்ற களைகண் (ஆதரவு) இழந்தனர்! இனி, அவ் வியக் கத்திற் சேராததினாலும் எத்தனை பேர் இத்தகைய துன்பங்களெல்லாம் உற்றனர்! எத்தனை பேர் அவமானப்படுத்தப் பட்டனர்!

மேலும், காந்தியடிகளாற் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கால் எத்தனை ஏழையெளியவர் மாலை வேளையிற் கள்ளுண்டு களித்துக் கவலையற்றிருக்கும் இன்ப நிலையை இழந்தனர்! எத்தனை கட் கடைக் குத்தகையாளர் வருமானம் இழந்தனர்!

காந்தியடிகள்

இனி, அரிசன வுயர்த்தம் என்று பெயரிட்டுத் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்தைக் தோற்றுவித்ததனால், எத்தனை பூசாரியர்க்கு வருத்தம்! எத்தனை மேல்வகுப்பார்க்கு வருத்தம்! பல நூற்றாண்டுகளாகப் பிறருக்குக் கீழ்ப்படிந்து, அவரைத் தெ-வமாக வணங்கி, அவர் இட்ட வேலையெல்லாம் செ-து, அவருக்கு நல்ல பிள்ளைகளா- நடந்துவந்த எத்துணையோ தாழ்த்தப்பட்டவர்க்கு இலவசக் கல்வியும் அரசிய லலுவலுமளித்து, அவர் தோற்றத்தை மாற்றி நிலையையுயர்த்தி, இனிமேல் என்றும் பிறருக் கடங்காதபடி செ-துவிட்டனரே! இது எத்துணைக் குறும்பாகும்! முற்பிறப்பில் செ-த தீவினையின் பயனா-த் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்து, பிறருக்குப் பிறவியடிமையாக விருந்து தொண்டுசெ-யக் கடமைப் பட்டவர்கள், இன்று, நல்வினையாளர்க்குப் பணியாதிருப்பதோடு, அவரொடு நெருங்கி உறவாடுவதும், அவருக்குச் சரிசமமாக வீற்றிருப்பதும், இவையும் போதாவென்று அவருக்குமேல் அதிகாரஞ் செலுத்துவதும், எத்துணைக் கொடுமை! எல்லாவற்றையும் படைக்கும் முற்றறிஞனான இறைவன், தமக்குப் பிறப்பில் விதித்த நிலை போதுமென்று, சால்வுடன் (திருப்தியா-) இருந்த தாழ்த்தப் பட்டோரை, உயர்த்தப்பட்டோருடன் என்றும் போட்டியிட்டுப் போராடும்படி செ-துவிட்ட காந்தியடிகள், இந்திய சமுதாயத்தையே சீர்குலைத்துச் சின்னப்படுத்திவிட்டனரே!

இங்ஙனம் நாட்டிற்குக் கேட்டை விளைத்தவர் தம் குடும்பத்திற் காவது ஏதேனும் ஆக்கம் தேடினாரா? அதுவுமில்லை. வருமான மிக்க வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டு, ஆண்டிபோற் கோலம் பூண்டு, பித்துக் கொண்டவர் போல் வாழ்நாளெல்லாம் தேசவிடுதலை தேச விடுதலை என்று கூவிச் சோம்பேறித்தனமா-த் தேசமெங்கும் சுற்றித்

,