உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

திரிந்து, கையிற் கிடைத்ததை யெல்லாம் பிறருக்குச் செலவிட்டு விட்டுத் தம் மக்களை உயர்ந்த பதவியில் வைக்காமலும், அவருக்கு ஒரு காசும் தேடாமலும், இறுதியில் தம்மையும் பேணாமல், பலமுறை யெச்சரிக்கப்பட்டும் அவற்றைப் பொருட்படுத்தாது, பாது காப்பற்ற வெளிநிலத்தில் கல்லாரோடும் பொல்லாரோடும் பழகித் தாமே தம் முடிவைத் தேடிக்கொண்டார்.

இங்ஙனம் பொறுப்பற்ற தனமா-த் தமக்கும் பிறர்க்கும் பல வகையில் அவமானத்தையும் துன்பத்தையும் அழிவையும் தேடிய காந்தியடிகளை, எங்ஙனம் நல்லவரென்று சொல்லுதல் கூடும்? அவர் செ-ததாகச் சொல்லப்படும் நன்மைகளுள், ஏதேனும் தீமையிலாத துண்டோ? இனி, பிறர் செ-தனவாகச் சொல்லப்படும் தீமைகளுள், ஏதேனும் நன்மையிலாததுண்டோ? இங்ஙனமிருப்பவும், காந்தியடி களை மட்டும் ஏன் நல்லவரென விதந்த கூறல் வேண்டும்? என்றும் உள்ளதை உள்ளவாறு கூறல் வேண்டுமேயன்றி, ஒருவர் செ-த நன்மை யையும் வேறு ஒருவர் செ-த தீமையையும் யொளித்து, உண்மைக்க மாறாகக் கூறுதல் தக்கதன்றாம். ஆகவே, காந்தியடிகள் நல்லவரல்லர் என்பதே எமது முடிவாம்.

பயிற்சி

பின் வருபவற்றைப் பற்றிப் புகழ்ச்சிக் கட்டுரை வரைக:

1. பண்டைத் தமிழர் பண்பாடு. 2. திருவள்ளுவர். 3. இளங் கோவடிகள். 4. மறைமலையடிகள். 5. சுப்பிரமணிய பாரதியார். 6. பாரதி தாசன். 7. எருது. 8. நா-.

(10) நோட்டக் கட்டுரை

கம்பர்

இராமாயணம்

இலக்கணம் தோன்றிய காலத்திலிருந்தே இலக்கிய நோட்டம் (Lit- erary Criticism) அல்லது இலக்கியத்தை ஆராயும் முறையும் இருந்து தான் வருகின்றது. அகத்தியம் தொல்காப்பியம் முதலிய முற்கால விலக்கணங் களில் அது மிகச் சுருக்கமாகவும், தண்டியலங் காரம் மாறனலங்காரம் இலக்கண விளக்கம் முத்துவீரியம் முதலிய பிற்கால விலக்கணங்களில் சற்று விரிவாகவும், கூறப்பட்டுள்ளது. ஆயினும், அதை ஓர் அழகிய தனிக்கலையாக வளர்த்தவர் தற்கால மேனாட்டறிஞரே.