உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

தன்கோள் நிறீஇப் பிறன்கோள் மறுப்ப தெதிர்நூல் என்பர் ஒருசா ரோரே

167

என்னும் இறையனாரகப் பொருளுரை மேற்கோட் சூத்திரத்தால், ஒரு நூலின் குற்றங்களை எடுத்துக் கூறுவதே முற்கால இலக்கிய நோட்ட முறை என்பதும், அங்ஙனம் கூறும் நூல் எதிர்நூல் எனப்படும் என்பதும், அறியலாகும். ஒரு நூலின்கண் உள்ள குற்றங்களை மட்டு மன்றிக் குணங்களையும் நடுநிலையாக இருந்து எடுத்துக் கூறுவதும் அவ்விரு கூறுகளையும் அழகாக விளங்குவதும், தற்கால இலக்கிய நோட்டமாகும். இம்முறைப்படி, கம்பரிராமாயணத்தை நோட்டஞ் செ-வாம்.

தமிழ்ச்செ-யுள்: யாப்புவகைப்படி, வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா என நால்வகையாகவும் பொருள்வகைப்படி, பாட்டு உரை நூல் வா-மொழி (மந்திரம்) பிசி (விடுகதை) அங்கதம் முதுசொல் (பழமொழி) என எழுவகையாகவும்; பனுவல் (பிரபந்த) வகைப்படி, அம்மை அழகு தொன்மை தோல் விருந்து இயைபு புலன் இழைபு என எண்வகையாகவும் வகுக்கப்பெறும்.

பனுவல் வகைக்கெல்லாம் பொதுப்பெயர் வனப்பு என்பது. இன்று அதற்குப் பதிலாகக் காவியம் அல்லது காப்பியம் என்னும் தற்பவ வடசொல் வழங்கி வருகின்றது.

சிலர் காவியத்தைத் தொடர்நிலைச் செ-யுள் என்பர். இலக்கண நூலும் கணியம் மருத்துவம் முதலிய கலைநூல்களும் தொடர்நிலைச் செ-யுளா யிருத்தலானும், தனிநிலைச் செ-யுளும் அடித்தொகையின் மிகுதியால் ஒரு காவியமாதல் கூடுமாதலானும், தொடர்நிலைச் செ-யுள் என்னும் பெயர் காவியத்திற்குப் பொருந்தாது. வனப்பு என்னும் சொற்கு அழகு என்னும் பொருளும் இருப்பினும், அப் பொருட்கு அணி அம் அழகு கவின் யாண் என்னும் பிறசொற்களு மிருத்தலின், அப் பொதுப்பொருளில் அச் சிறப்புச் சொல்லை வழங்குதல் நன்றன்று.

ஒரு சிறந்த இலக்கியப் பனுவல், 1. இலக்கணம் வழாமை, 2. இன்ப முறுத்தல், 3. திறம்பட மொழிதல், 4. உள்ளது கூறல், 5. ஒழுக்கம் விதித்தல், 6. உலகியல் காட்டல், 7. அறிவை வளர்த்தல், 8. பலவகை நோக்கு, 9. இயற்கை யெழிலில் ஈடுபடுத்தல், 10. விழுமியது விளம்பல்,