உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

11. அளவறிந்துரைத்தல் 12. தூ-மை பேணல் எனப் பன்னீர் இயல்பு களைக் கொண்டிருத்தல் வேண்டும்.

கம்பர்ராமாயணத்தில் இலக்கணம் வழாமையைப்பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை. கம்பர் செ-யுள்கள், வினைத்திறம் முற்றி விருத்தப் பாநலம் பழுத்தவை, "விருத்தமெனும் ஒண்பாவிற் குயர் கம்பன்," என்னுங் கூற்றை முற்றும் மெ-ப்பிப்பவை; விருத்த யாப்பிற்கு விழுமிய எடுத்துக்காட்டானவை.

இன்பமுறுத்தல், சொல்லாலின்ப முறுத்தலும் பொருளாலின்ப முறுத்தலும் என இருவகை.

குழலும் வீணையும் யாழுமென் றினையன குழை

மழலை மென்மொழி கிளிக்கிருந் தளிக்கின்ற மகளிர் சுழலு நன்னெடுந் தடமணிச் சுவர்தொறுந் துவன்றும் நிழலுந் தம்மையு மெ-ம்மைநின் றறிவரு நிலைய

என்பது சொல்லாலும்,

(ஊர்தேடுபடலம், 6)

மருமத்துத் தன்னை யூன்றும் மறக்கொடும் பாவந் தீர்க்கும் உருமொத்த சிலையி னாரை ஒருப்படுத் துதவி நின்ற கருமத்தின் விளைவை யெண்ணிக் களிப்பொடு காண வந்த தருமத்தின் வதன மென்னப் பொலிந்தது தனிவெண் திங்கள் (தைலமாட்டு படலம், 50)

"

என்பது பொருளாலும், இன்பமுறுத்தும்.

தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல்கள் முழவி னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத் தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்

வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ

என்பது, இருவழியும் இன்பமுறுத்தும்.

திறம்படி மொழிதல் பலதிறப்படும்.

பருகிய நோக்கெனும் பாசத் தாற்பிணித்

தொருவரை யொருவர்தம் முள்ள மீர்த்தலால்

(நாட்டுப்படலம், 4)

(மிதிலைக்காட்சிப் படலம், 37)