உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

ஊதைகள் சொரிவன உயிருறும் அமுதம் காதைகள் சொரிவன செவிநுகர் கவிகள்

என்னும் பகுதிகள் மிகுந்த சொல்லாற்ற லுடையவை.

169

(நாட்டுப்படலம், 51)

பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்ப் பல்லவம னுங்கச் செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும் வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்

(சூர்ப்பநகைப் படலம், 31)

என்பதின் மெல்லோசை பெண்ணழகின் மென்மையையும்,

ஆடு கொடிப்படை சாடி யறத்தவ ரேயாள வேடு கொடுத்தது பாரெனு மிப்புகழ் மேவீரோ நாடு கொடுத்தவென் னாயக னுக்கிவர் நாமாளும் காடு கொடுக்கில ராகி யெடுத்தது காணீரோ

என்பதின் வல்லோசை குகனின் போர்த்துடுக்கையும்,

உற்றக லாமுன்

கற்ற குரங்கைப்

பற்றுமி னென்றான்

முற்றுமு னிந்தான்

(குகப்படலம், 22)

என்பதின் குறளடிச் சந்தம்

இராவணனின்

(இலங்கை யெரியூட்டுப் படலம், 48) ஏவல் முடுக்கையும்,

உணர்த்துகின்றன.

ஒரு காட்சிப்பொருளை வரணித்தலினும், கருத்துப் பொருளை வரணித்தலே திறப்பாடாம்.

இராவணன் தனக்கு முன் நின்ற உருவெளித் தோற்றத்தைச் சுட்டி,

மைந்நின்ற வாட்கண் மயில்நின்றென வந்தென் முன்னர் இந்நின்றவ ளாங்கொ லியம்பிய சீதை

என்று தன் தங்கையாகிய சூர்ப்பநகையைக் கேட்டதும், அவள் அதற்கு,

செந்தாமரைக் கண்ணொடுஞ் செங்கனி வாயி னோடும் சந்தார்தடந் தோளொடுந் தாழ்தடக் கைகளோடும்

அந்தாரக லத்தொடு மஞ்சனக் குன்ற மென்ன வந்தானிவ னாகுமவ் வல்விலி ராம னென்றாள்

சூர்ப்பநகை சூழ்ச்சிப்

படலம்,148,149)