உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல் 171 என்னும் இடத்தில், 'அறிவன்' என்னும் சொல்லால் விசுவாமித்திரன் எல்லாவற்றையும் நுண்ணிதா- அறிந்தான் என்பதையும், அல்லையாண் டமைந்த மேனி யழகனும் அவளும் துஞ்ச (குகப்படலம், 42) என்னும் குகன் கூற்றில், 'அவளும்' என்னும் அடைபெறாச் சொல்லால் குகனது பிறன்மனை நோக்காத பேராண்மையையும்; கம்பர் குறிப் பா-ப் பெறவைத்தமை, நல்லிசைப் புலவர் செ-யுட்கே யியல்பான நோக்கு என்னும் உறுப்பாகும். இந்திரன் சசியைப் பெற்றான் இருமூன்று வதனத் தோன்தன் தந்தையு முமையைப் பெற்றான் தாமரைச் செங்க ணானும் செந்திரு மகளைப் பெற்றான் சீதையைப் பெற்றா - நீயும் அந்தரம் பார்க்கின் நன்மை யவர்க்கில்லை யுனக்கே யையா!! பாகத்தி லொருவன் வைத்தான் பங்கயத் திருந்த பொன்னை ஆகத்தி லொருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான் மேகத்தின் மின்னை முன்னே வென்றநுண் ணிடையை நீயும் மாகத்தோள் வீர பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி? சூர்ப்பநகை சூழ்ச்சிப்படலம், 75, 76) என்னும் செ-யுள்களால், இராவணன் சீதையைப் பெறுவது ஓர் ஒப்பு யர்வற்ற பேறாகும் என்று சூர்ப்பநகை இராவணனுக்கு உணர்த்து வதாகக் கூறி; அதே சமையத்தில் அச் சீதையால் அவனுக்குத் தீமையே யன்றி நன்மையில்லை யென்றும், அவளை வைத்து ஒருபோதும் அவன் வாழ முடியாதென்றும், தன்னையறியாமலே விதியா லேவுண்டு அவனுக்குக் கூறியதாக நாம் கொள்ளுமாறு மேற்காட்டிய செ-யுள் களின் ஈற்றடி களை யிரட்டுறலாக அமைத்துள்ளார் கம்பர். சில செ-யுள்கள் எளியனபோல் தோன்றினும், ஊன்றி நோக் கின், மிக ஆழமுடையனவாக விருக்கும். இதனாலேயே, கம்பர் இராமாயணச் செ-யுள்களைக் கம்ப சூத்திரம் என்பர் முதுபெரும் புலவர். இவ் வியல்பிற்கு, வண்மை இல்லையோர் வறுமை யின்மையால் திண்மை யில்லைநேர் செறுந ரின்மையால் உண்மை யில்லைபொ- யுரையி லாமையால் ஒண்மை யில்லைபல் கேள்வி யோங்கலால் என்னும் நாட்டுப் படலச் செ-யுளை (53) எடுத்துக்காட்டாகக் கூறலாம்.