உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ஒரு பொருளை ஓரிடத்திற் பொதிந்து வைத்துப் பின்பு நெடுநாட் சென்று அதனை மீள அவிழ்த்தாற் போல, கம்பர் ஓரிடத்தில் ஒரு செ-தியைக் கூறி வைத்துப் பின்பு பல காண்டந் தாண்டி அதை விடுவித்துரைப்பது இயல்பு.

மயிலுடைச் சாய லாளை வஞ்சியா முன்ன நீண்ட

எயிலுடை யிலங்கை நாதன் இதயமாஞ் சிறையில் வைத்தான்

என்று ஆரணிய காண்டத்திற் கூறியதை,

(சூர்ப்பநகை சூழ்ச்சிப்படலம், 85)

கள்ளிருக்கு மலர்க்கூந்தற் சானகியை

மனச்சிறையிற் கரந்த காதல்

உள்ளிருக்கு மெனக்கருதி யுடல்புகுந்து

தடவியதோ வொருவன் வாளி

என்று யுத்தகாண்டத்தில் மண்டோதரி கூற்றாக எடுத்து முடித்தல் காண்க.

அறந்தப்பியர் அழிவர் என்பதே கம்பர் வனப்பின் அடிப் படைக் கொள்கையாதலின், அறந்தவறாமையை இயன்றவிடமெல் லாம் அவர் வற்புறுத்திச் செல்வர். இது அணிநூலார் கூறும் பாவிகம் என்னும் வனப்பியற் பண்பாகும்.

உள்ளது கூறல் என்னுங் கூற்று, கம்பரிராமாயணத்தில் மிகத் தாழ்ந்துள்ளது. இராமாயணக் கதைக்கு மூலமான தசரத சாதகக் கதை கட்டுக்கதையென்றும், வான்மீகி யிராமாயணக்கதை அதைத் திரித்து விரிவுபடுத்திய புனைகதையென்றும், கம்பரிராமாயணக் கதை அதை யுஞ் சிலவிடத்து மாற்றிய நாடக வனப்புக்கதை யென்றும், ஆரா-ச்சி யாளர் கூறுதலால், கதைப் போக்கிலுள்ள நிகழ்ச்சிகளைப் பற்றி யாம் குற்றங் கூற முடியாது. ஆயின்,

வ-யம்யா னாண்டவாண் டுங்கள் மாட்சியால் அ-யமி லறுபதி னாயி ரம்மரோ

என்று தசரதன், அறுபதினாயிர மாண்டு ஆண்டதாகவும்;

(மந்திரப்படலம், 14)