உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

அறுபதி னாயிர ரளவி லாற்றலர்

173

தறிமடுத் திடையிடை தண்டிற் றாங்கினர் (கார்முகப்படலம், 3) என்று, சனகன் வில்லை அறுபதினாயிரவர் தூக்கிச் சென்றதாகவும்,

ஆண்டா யிடைதீ யவனா யிழையைத் தீண்டா லெனுமே லுரைசிந் தைசெயாத் தூண்டா னெனலா முயர்தோள் வலியாற் கீண்டா னிலம்யோ சனைகீ ழொடுமேல்

(படலம், 74)

என்று, இராவணன் சீதையை மூன்றுகல் தொலைவுள்ள நிலத்தொடு பெயர்த்துத் தன் தேரில் வைத்துக்கொண்டு சென்றதாகவும், கம்பர் கூறியுள்ளது உண்மைக்கும் உத்திக்கும் பொருந்துவதன்று. பரமார்த்த குரு மாணவர் ஊசியைப் பனைமரத்திற் செருகித் தூக்கியது போலவும், திருவிழாவில் தெ-வச் சிற்றுருவைக் கனத்த சப்பரத்தி லிட்டுப் பற்பலர் தூக்குவதுபோலவும், சனகன் வில்லை நீண்ட தண்டகப்படைகள் மேலிட்டு நூற்றுக்கணக்கானவர் தூக்கியதாகக் கொள்ளலாம். ஆயினும், அறுபதினாயிரவர் தூக்கியதாகக் கொள்ள முடியாது. இனி, அற்ற பதினாயிரர் (இரண்டாக அல்லது பாதியாகப் பகுத்த பதினாயிரர்) என்று பொருள்கொண்டு, ஐயாயிரவர் தூக்கிய தாகக் கூறினும், அதுவும் உண்மையாகாது. அறுபதினாயிரத்தை அற்ற பதினாயிரம் என்று இங்குக் கொள்ளின், தசரதன் ஆண்ட காலத்தைக் கூறியவிடத்தும் அங்ஙனம் கொள்ளல் வேண்டும். அங்ஙனம் ஒருவரும் கொண்டிலர். அறுபதினாயிரவர் தூக்கிய வில்லை இராமன் எளிதா-த் தூக்கி முடித்தானாயின், அறுபதி னாயிரம் ஆள்வலி அவனுக்கிருந் திருத்தல் வேண்டும். அது இருந்தி ருப்பின், வாலி வலியும் இராவண வலியும் அதினு மிக்கிருந்திருத்தல் வேண்டும்.

இராவணன் மூன்றுகல் தொலைவுள்ள நிலத்தைப் பெயர்த்துத் தன் தேரில் வைத்தானாயின், அத் தேர் எத்துணைப் பெரிதா- இருந்தி ருத்தல் வேண்டும்! அதன் அடித்தளம் குறைந்தது மூன்று சதுரக்கற் பரப்பினதா- இருந்திருத்தல் வேண்டுமே! அஃதாயின் அதன் கும்பம் பனிமலைக்கும் மேற்பட்டிருத்தல் வேண்டும். இராவணன் சீதையை மூன்றுகல் தொலைவுள்ள நிலப்பரப்பொடு இலங்கைக் கெடுத்துச் சென்று, அசோகவனத்தில் வைத்தனன். அதனால், அங்கும், இலக்கு மணன் அமைத்த இலைக்குடிலிலேயே சீதையிருந்தாள் என்பதை,