உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

வேலையு ளிலங்கை யென்னும் விரிநக ரொருசார் விண்டோ- காலையு மாலை தானு மில்லதோர் கனகக் கற்பச்

சோலையங் கதனின் நும்பி புல்லினாற் றொடுத்த தூய

சாலையி னிருந்தாள் ஐய தவஞ்செ-த தவமாந் தையல்

என்று அனுமன் கூற்றாகக் கூறுகின்றனர் கம்பர்.

(திருவடிதொழுத படலம், 31)

இனி, கழுகு (சடாயு), குரங்கு முதலிய அஃறிணை யுயிர்கள் பேசிய தாகவும், மக்களுக்கு இனமுறைப்பட்டிருந்ததாகவும், கம்பர் கூறுவதும் உண்மையொடு படாது. அங்ஙனமாயின் சிந்தாமணி சிலப்பதிகாரம் முதலியவற்றுள்ளும் நம்பத்தகாத பல செ-திகள் கூறப் பட்டுள்ளனவே! அவற்றைப்பற்றி என் சொல்வதெனின்; என் சொல்வதெனின்; அவை யுங் குற்றமாகக் கொள்ளத்தக்கனவே. ஆயினும், சிந்தாமணிக்கதை கட்டுக் கதையாதலின் அதனைப்பற்றி ஆரா-ச்சியில்லை. சிலப்பதி கார மணி மேகலைகளுள் கூறப்பட்டுள்ள இயற்கைக்கு மாறானவும் இறும் பூதானவுமான செ-திகள் மதவியற்பட்டனவாதலின், அவையும் ஈண்டெடுத்துக் கொண்ட பொதுமுறை இலக்கிய நோட்டத்திற்குரியன வல்ல. மதவியற் செ-திகளெல்லாம் முற்றும் நம்பிக்கையைப் பொறுத் தனவாதலின், ஏரணமுறைப்பட்ட இலக்கிய நோட்டத்திற் கிடந்தரா என்க.

அற்றாயின், சீதை திருமகளின் தோற்றரவென்று கம்பர் நம்பிய தால், அவளை இராவணன் தொட்டுத் தூக்கிக்கொண்டு செல்லாமல் நிலத்தொடு பெயர்த்துக்கொண்டு சென்றான் என்பதும், மதத்தின்பாற் பட்டதுதானே யெனின், அது மதத்தின்பாற் பட்டதாயினும், இராவணன் சீதையை நிலத்தொடு பெயர்த்துக்கொண்டு சென்றான் எனக் கூறாது, அவள் திடுமெனத் திருவுருக் கரந்தாளென்றோ, அவளால் அவன் சாவிக்கப்பட்டான் என்றோ கூறியிருக்கலாமே! இதுவன்றோ உத்திக் கும் தமிழ் மரபிற்கும் பொருந்துவதாகும்? எங்ஙனமாயினும் இராவணன் சீதையை இராமனிடத்தினின்றும் பிரித்து இலங்கைக்குக் கொண்டு சென்றமட்டில், அவளது ஆற்றலின்மையல்லவா பெறப்படு கின்றது என்க.

இனி, எச் செ-தியையும் உயர்வுநவிற்சியாகக் கூறுதற்கு இலக் கணம் இடந்தருமே யெனின், தரும்; ஆயின், அதை மெ-யென்று காட்டற்கு டந்தராதென்க. கம்பரின் இராமப்பற்று அவர் வனப்பு நெடுகலும்