உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

175

கரைபுரண் டோடும்போது, அவர் கூறிய பொருந்தாச் செ-திகளை உயர்வுநவிற்சியென்று ஆரா-ச்சியில்லார் கொள்வ தெங்ஙனம் இயலும்?

ஒழுக்கம் விதித்தல் கம்பரிராமாயணத்தில் உயர்ந்தபடியாக வுள்ளது. குரவர்ப் பணிதல், அறவோர்ப் பேணல், துறவோர்க் குதவல், இரப்போர்க்கீதல், விருந்தோம்பல், உடன்பிறப்பன்பு, ஒருமனை மணம், பிறனில் விழையாமை, ஆடவர் கற்பு, நன்றி மறவாமை, குல வேறுபாடு கொள்ளாமை, படையிழந்தவனொடு பொராமை முதலிய பல அறங்கள், நேர்வழியாகவும் நேரல்வழியாகவும் விதிக்கப் பெறு கின்றன. 'அறம் வெல்லும் மறம் தோற்கும்' என்பதை உணர்த்துவதே கம்பர் குறிக்கோள். இதன் வாயிலாக, மால்நெறி வைணவச் சார்பான கடவுட்பற்றை யூட்டுவதும் அவர் நோக்கம்.

கம்பர் சிறந்த அறிஞரேயாயினும், இராமன் ராமன் அனுமனுக்குச் சீதையின் உடற்கூற்றை வரணித்ததைக் கூறும் பகுதியில், பல கூற்று களைப் பயனற்ற முறையிலும் இடக்கராகவும் கூறியிருப்பது, பழங் காலப் பேதைமைத் தொடர்ச்சியென்றே கொள்ள வேண்டியிருக் கின்றது. ஆயினும், அஃது அவர் புலமைக்கிழுக்கே.

உலகியல் காட்டல் கம்பரிராமாயணத்திற்கு ஒரு சிறப்பியல் பென்று கூறலாம். உயர்ந்தோர் ஒழுக்கம், பலர்க்கும் உதவவேண்டிய கடமை, காதலியல்பு, இல்லற வாழ்வு, வாழ்க்கைப் போராட்டம், பொறாமைக்காரர் சூழ்ச்சி, இன்ப துன்பத் து-ப்பு, பகைவரும் அவரை வெல்லும் வகையும், நட்புக்கோடல், சுற்றந்தழால், உலகப் போக்கு முதலிய பற்பல செ-திகளைப்பற்றிக் கம்பர் கூறிப் படிப் போர்க்கு உலகியலறி வூட்டுகின்றார்.

ஆயினும், பிற துறைகளில் அவர் அங்ஙனம் செ-வதில்லை. சிலப்பதிகாரம் சிந்தாமணி முதலிய வனப்புகளிலுள்ள கலை வரண னைகளைக் கம்பரிராமாயணத்திற் காணமுடியாது; வரலாற்றுச் சான்று களையுங் காண்பதற்கில்லை. எங்கெங்கு நோக்கினும், உலகியல் ஒன்றே அவர் வனப்பிற் காணக்கிடைக்கும். இஃது ஒரு பெருங் குறைவே.

நடுநிலை நோக்கும் கம்பர்க் கில்லையென்றே கூறவேண்டும். இராமன் மறைந்து நின்று அம்பெ-து வாலியைக் கொன்றது