உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ஆண்மையென்று, நடுநிலையாளர் ஒருவரும் ஒப்புக்கொள்ளார். அதன் சரிமையைக் காட்ட இராமன் கூற்றாகக் கம்பர் கூறுவது, சற்றும் பொருந்தாது. இராமன் இறைவனின் தோற்றரவாயினும், மாந்த வுடம்பி லிருந்ததனால், மாந்தத்தன்மைக் கேற்ப, மறைந்துநின்று வாலியை வலக்காரமா-க் கொன்றார் என்று சிலர் கொள்வர். அது தவறு. பிறர்க்கு வழிகாட்டவேண்டிய உயர்ந்தோரே ஒழுக்கந்தவறின், தாழ்ந்தோரைப் பற்றி என் சொல்வது? இயல்பான மக்களே சிறந்த பண்பாடுடையரா யிருக்கும்போது, இறைவன் தோற்றரவாயுள்ளவர் எத்துணைப் பண்பாடு சிறந்தவரா யிருத்தல் வேண்டும்? 'ஆபத் திற்குப் பாவமில்லை' யென்று கொண்டு எவ்வழியிலும் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வது ஆரியவழக்கு. அது தமிழ் மரபிற்கு முற்றும் முரணானது.

இராமன் இலக்குமணனைக் கொண்டு சூர்ப்பநகையின் மூக்கறு வித்ததையும், கம்பர் முற்றும் ஒப்புக்கொள்கின்றார். கடுந் தண்ட மாயின் அவளைக் கொன்றிருத்தல் வேண்டும்; எளிய தண்டமாயின் அவளது கூந்தலையே அறுத்திருக்கவேண்டும்.

இராவணைனை இறப்பப் பழித்தலும் கம்பரது நடுத்திறம் பலைக் காட்டும். மக்கள் தோன்றிய காலத்திலிருந்து பிறன்மனை கவர்ந்தவர் ஒருவரிருவரல்லர்; எண்ணிறந்தோராவர். பாரிசு (Paris) 616 என்ற இளவரசன், மனிலேயசு (Manilaus) என்னும் அரசன் மனைவியாகிய எலனை (Helen)த் தூக்கிச் சென்றான் என்பது கிரேக்க நாட்டுக் கதை. பல நாட்டு மன்னர் தம் மாற்றரசரைக் கொன்று அவர் மனைவியரை மணந்திருக்கின்றனர். பண்டைத் தமிழ் அரசர் சிலர், பகையரசரைக் கொன்ற பின் அவர் தேவியரை மணப்பதுஞ் செ-யாமல் வேளம் என்னும் சிறையகத்திலிட்டு வைத்தனர். தாவீது என்னும் யூதவரசன், உரியா என்பவனைப் போர்க்களத்திற் கொல் வித்து, அவன் மனைவியைக் கவர்ந்துகொண்டான். ஆங்கிலக் கடற்படைத் தலை வரான நெல்சன் பிரபு, பிறன் மனையாரான ஆமில்டன் (Hamilton) அம்மையாரை இறுதிவரை மனைவியா-க் கொண்டிருந்தார். இக் காலத்திலும் பிறன்மனைவியைத் தீர்வை (Divorce) முறையிற் பிரித்து மணந்துகொள்வது அரசர்க்கும் வழக்கமாயிருக்கின்றது. பொது மக்களிடத்திலோ, இது பெருவழக்கு. உயர்ந்தோர் செ-தி மதியத்தின் மறுப்போல் வரலாற்று வாயிலா-த் தெரிகின்றது. பொதுமக்கள்