உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

177

செ-தியோ அவர் காலத்திலேயே மறைந்து போகின்றது. இராவணன் சீதையின் பேரழகில் இறப்ப ஈடுபட்டு அவளைச் சிறைசெ-து கொண்டுபோ- வைத்திருந்தன னாயினும், அவள்

விருப்பின்றி டாதென்னும் கோட்பாடுடையனா

அவளைத் தொடுதல் யிருந்தமையே, அவன் குணச் சிறப்பைக் காட்டும். ஆயினும், அவன் குற்றவாளி யல்லாமலில்லை. உலகத்தில் அவன் ஒருவனே பிறன்மனை கவர்ந்த பேயன் என்னுங் கருத்துப் பட, அவனை இறப்பப் பழிப்பது அத் துணை நன்றன்று என்பதே யாம் குறிக்க விரும்பிய செ-தி. பண்டைக் காலத்திற் பெண்களை நுகர்பொருளாகவும் செல்வ மாகவுமே கருதி வந்தனர். மண் பெண் பொன் என மூவகையாகச் செல்வத்தை வகுப் பது மரபு. ஒரு சிறந்த நாட்டை அல்லது பொருளை ஓர் அரசனிடத் திருந்து மற்றோரரசன் கவர்வது எங்ஙனம் இயல்போ, அங்ஙனமே ஓர் அழகிய பெண்ணை யும் கவர்வது இயல்பாம். இதை யுணரும்போது, இராவணன் கறை கம்பர் காட்டும் அளவினும் மிகக் குறைந்தே காண்கின்றது.

விபீடணனை இறப்ப வுயர்த்தியும் கும்பகருணனை இறப்பத் தாழ்த்தியும் கூறுவதும், நடுநிலையானதாகத் தோன்றவில்லை.

கருத்துற நோக்கிப் போந்த காலமு நன்று காதல்

அருத்தியு மரசின் மேற்றே யறிவினுக் கவதி யில்லை பெருத்துயர் தவத்தி னானும் பிழைப்பில னென்னும் பெற்றி திருத்திய தாகு மன்றே நம்வயிற் சேர்ந்த செ-கை

(விபீடண னடைக்கலப் படலம், 107)

என்னுஞ் செ-யுளால், கம்பரே, விபீடணன் இலங்கையரசை வேட்ட தாகக் குறிப்பிடுகின்றார். அவ் வேட்கைப்படி, 'கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமாக, அவனுக்கு முடிகலமும் இராமனால் முன்னரே சூட்டப் பெறுகின்றது. இதனாலேயே, காட்டிக் கொடுப்ப வரை விபீடணாழ்வாரென்று அவைணவர் குறிக்கின்றனர். விபீடணன் நல்லோன் என்னும் கும்பகருணன் தீயோன் என்றும் கம்பர் கூறினும்,

கருத்திலா விறைவன் தீமை கருதினா லதனைக் காத்துத் திருத்தலா மாகி னன்றோ திருத்துதல் தீரா தாயின் பொருத்துறு பொருளுண் டாமோ பொருதொழிற் குரிய ராகி ஒருத்தரின் முன்னஞ் சாதல் உண்டவர்க் குரிய தம்மா