உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

தும்பியந் தொடையல் வீரன் சுடுகணை துரப்பச் சுற்றும் வெம்புவெஞ் சேனை யோடும் வேறுள கிளைஞ ரோடும் உம்பரும் பிறரும் போற்ற ஒருவன்மூ வுலகை யாண்டு தம்பிய ரின்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்மேல் செம்பிட்டுச் செ-த விஞ்சித் திருநகர்ச் செல்வந் தேறி வம்பிட்ட தெரிய லெம்மு னுயிர்கொண்ட பகையை வாழ்த்தி அம்பிட்டுத் துன்னங் கொண்ட புண்ணுடை நெஞ்சோ டைய கும்பிட்டு வாழ்கி லேன்யான் கூற்றையு மாடல் கொண்டேன்.

(கும்பகருணன் வதைப்படலம், 156) என்னும் செ-யுள்களால், விபீடணன் நன்றி கொன்றவன் என்பதைத் தம்மையறியாமலே குறிப்பா-த் தோன்றச் செ-கின்றனர். இங்ஙனம் அவர் மனம் இருவேறு கருத்திடை யூசலாடி யிடர்ப்படுவதற்குக் காரணம், அவர் இராமாயணக் கதையையும் இராமன் திருமாலின் தோற்றர வென்பதையும் முற்றும் நம்பியதே. வால்மீகி தம் வனப்பில் ஒரோவிடத்துக் கூறிய இராமத்தோற்றரவுக் கருத்தை, கம்பர் தம் வனப்பில் நெடுகலும் கூறியுள்ளார். மட்டிறந்த மதப் பற்றுடைய ரெல்லாம் பகுத்தறி விழந்து நடுநிலை திறம்புவதை நோக்கும்போது, 'மக்கள் முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை' என்று நம்பா மதத்தார் கூறுவதும், பொருளுள்ளதென்றே தோன்றுகின்றது.

66

இனி, “காவிரிநா டன்ன கழனிநா டொரீஇ" என நாட்டுப் பற்றும், ‘என்றுமுள தென்றமிழ்" என மொழிப்பற்றும், கம்பர் காட்டி யிருப்பது குற்றமாகக் கொள்ளத் தக்கதன்றாம். அவர் இளங்கோ வடிகள் போல முற்றத்துறந்த முழு முனிவரல்லர் என்பது மட்டுமன்று; காவிரி நாடும் தமிழும் உண்மையில் சித்தரும் புகழக்கூடிய சிறப்பு வா-ந்தனவாம்.

கம்பர் வனப்பு இயற்கை யெழிலில் ஈடுபடுத்தும் திறத்தைக் காட்டற்கு.

பம்புதேன் மிஞிறு தும்பி பரந்திசை பாடி யாட

உம்பர்வா னகத்து நின்ற வொளிவளர் தருவி னோங்கும் கொம்புகள் பனைக்கை நீட்டிக் குழையொடு மொடித்துக்

தும்பிகள் உயிரே யன்ன துணைமடப் பிடிக்கு நல்கும்

கோட்டுத்

(வரைக்காட்சிப் படலம், 2)

என்னும் செ-யுளே போதுவதாகும்.