உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

அரனதிக னுலகளந்த வரியதிக னென்றுரைக்கு மறிவி

பரகதிசென் றடைவரிய பரிசேபோல்

179

லோர்க்குப்

(நாடவிட்ட படலம், 24)

தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமல மன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கைகண் டாரு மஃதே வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ்கொண்ட சமயத் தன்னா னுருவுகண் டாரை யொத்தார் (உலாவியற் படலம்,19) என்னும், பகுதிகள் விழுமியது விளம்புவன. இவற்றுள், 'தோள் கண்டார்’ என்னும் ஒரு செ-யுளே. கம்பர் வனப்பின் குறையை யெல்லாம் மறைக்கத்தக்க அருமை வா-ந்ததாகும். இது பட்டை தீர்ந்த முழுவயிரம் போல் ஒளிரும் குற்றமற்ற விருத்தச் செ-யுள்.

குமுத னிட்ட குலவரை கூத்தரின்

திமித மிட்டுத் திரியுந் திரைக்கடல்

துமித மூர்புக வானவர் துள்ளினார் அமுத மின்னு மெழுமெனு மாசையால் 42)

(சேது பந்தனப் படலம்,

என்பது போன்ற வரையில் உயர்வுநவிற்சிகளும்; சுந்தர காண்டத்தில், கிங்கரர் வதைப் படலம், சம்புமாலி வதைப் படலம், பஞ்சசேனா பதிகள் வதைப் படலம், அட்சகுமாரன் வதைப்படலம், இலங்கை யெரியூட்டு படலம் முதலியவற்றால், இராமவிராவணப் போருக்கே இனித் தேவையில்லை யென்று படிப்போர் கருதும்படி, அனுமானின் மறச் செயல்களை மிகைப்படுத்திக் கூறியிருப்பதும்; அளவறிந் துரைத்தலாகா.

இனி, கம்பரிராமாயணத்தின் ஆறு காண்டங்களுள் ஒன்றான யுத்தகாண்டம், அவ் வனப்பின் 10,459 செ-யுள்களுள் 4358ஐக் கொண்டிருப்பது, பொருத்த வீதத்திற் கேற்றதன்று எனச் சிலர் கூறுவர். இராமன் வாழ்க்கையில் அவன் இராவணனோடு செ-த போரே முக்கியமான தாகலானும், கம்பரும் அதை வரணிப்பதையே சிறப்பாகக் குறிக்கொண்டதினாலும், அது பதினெட்டு மாதம் நடந்த தகாகச் சொல்லப்படும் விரிவுடைய தாகலானும், அவர் கூற்றுப் பொருந்தாது.

இனி, தூ - மை பேணலை நோக்கின், கம்பரிராமாயணம் குற்ற முடைய தன்றென்பது, மேற்காட்டிய செ-யுள்களானேயே விளங்கும்.