உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கடைச்சங்கக் காலத்திலேயே சில வடசொற்கள் இலக்கியத்தில் இடம் பெற்றுவிட்டமையால், கம்பர் காலமாகிய 12ஆம் நூற்றாண்டை நோக்க. அவர் வனப்பில் வந்துள்ள வடசொற்கள், அதன் நடைத் தூமையைக் குலைக்கும் அளவு பெருந்தொகையின வல்ல.

இதுகாறும், ஒரு பருக்கைப் பதமாக ஒவ்வோ ரியல்பிற்கும் ஓரிரு செ-யுளை யெடுத்துக்காட்டிக் கம்பரிராமாயணத்தை நோட்டம் செ-ததின் பயனாக, அது சிலப்பதிகாரத்திற் கொத்த சிறப்புடைய தன்றாயினும், தள்ளத் தக்கதன்றிக் கொள்ளத்தக்க இலக்கியமே என்பது, நடுநிலையான முடிபென்க. கதை வேறு; இலக்கியம் வேறு. இராமாயணக்கதை பழங்கதையாதலின், ஈண்டை யாரா-ச்சிக் குரிய தன்று. கம்பர் இராமாயணக் கதையைத் தெரிந்து கொண்டதற்குக் காரணம், அது சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் இடையறாது சொல்லப்பெற்று, திருமால் வழிபாட்டுத் தமிழருள் ளத்தில் இராமன் திருமாலின் தோற்றரவு என்னும் நம்பிக்கை ஆழமாக வேரூன்றியதே. ஆதலின் கதைக்குற்றம் முற்றும் கம்பரு டையதன்று. பகுத்தறிவாளர் கதையை நோக்காது, கம்பர் செ-யுளை மட்டும் சுவைத்தின்புறல் வேண்டும்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெ-ப்பொருள் காண்ப தறிவு.

பயிற்சி 1

பின் வருபவற்றைப்பற்றி நோட்டக்கட்டுரை வரைக:

1. பெரியபுராணம். 2 புராணக்கல்வி. 3. தமிழிலக்கியம். 4. பாரதி தாசன் பாடல்கள்.

பயிற்சி 2

பின் வருபவற்றைப்பற்றிப் பொருத்தமான கட்டுரை வரைக:

1. செ-தித்தாளின் செல்வாக்கு. 2. இந்தியா விடுதலையடைந் ததால் விளைந்துள்ள

நன்மைகள். 3. மனமுண்டானால் இடமுண்டு. 4. காலந்தவறாமை. 5. சிக்கனம். 6. என் கடன் பணிசெ-து கிடப்பதே. 7. நீர் விரும்பும் தொழில். 8. மொழிவாரி மாகாணப் பிரிவு. 9. 'பள்ளிக் கணக்குப் புள்ளிக் குதவாது'. 10. நற்பழக்கங்கள். 11. பன்மொழியறிவின் பயன். 12. சிறியோரெல்லாம் சிறியோரல்லர். 13. அரசியல் மதத்தில் தலையிடலாமா? 14. நடைச் சுற்றுப்போக்கு (Walking tours). 15. ஏழை