உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

181

படும் பாடு. 16. படியாதவன் படும்பாடு. 17. உலக வொற்றுமைக்கு வழிகள். 18. மேனாட்டாரிடமிருந்து நாமும் நம்மிடமிருந்து அவரும் கற்றுக் கொள்வன. 19. போரை ஒழிப்பது எப்படி? 20. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம். 21. 'எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது' 22. கூட்டுறவுக் கழகம். 23. பழக்கங்கள் அமையும் வகை. 24. மாணவர் முக்கியமாகக் கற்கவேண்டியவை. 25. முற்காலம் பொற்காலமா? 26. இளமையின்பம். 27. வாழ்நாளை நீட்டிக்கும் வழிகள். 28. என் வாழ்க்கையில் ஒரு முக்கிய மான நாள். 29.ஆண்டிற் சிறந்த பருவம். 30. மறுமையைப் பற்றிய உம் கருத்து.

8. சுருக்கி வரைதல் (Precis Writing)

i. முன்னுரைக் குறிப்புகள்

ஒரு விரிவான உரைநடைப்பகுதியைப் பொருள் கெடாதவாறு சுருக்கமா எழுதுவது, சுருக்கி வரைதல் எனப்படும்.

ஒரு பகுதியை எவ்வளவு வேண்டுமாயினும் சுருக்கலாம். ஆயின், பொருள் கெடாதவாறு சுருக்கவேண்டியிருப்பதால், பொது வா- மூன்றிலொரு பங்காகச் சுருக்குவதே, மாணவர் சுருக்கிவரைதற் பயிற்சியாகும்.

(1) வாசகப்பயிற்சி

சுருக்கி வரைதலின் பயன்கள்

ஓர் உரைநடைப் பகுதியைச் சுருக்கி வரைதற்கு அதை ஊன்றிப் படிக்க வேண்டியிருப்பதால், சுருக்கி வரைதல் சிறந்த வாசகப் பயிற்சி யாகும். கவனமின்றிப் படிப்பதால் எளிய பொருளும் உணரப் படாமற் போவதும், கவனித்துப் படிப்பதால் அரிய பொருளும் உணரப்படுவதும் இயல்பு, அதோடு, கவனித்துப் படிக்கும் பகுதியே நினைவிலு மிருக்கும். கவனியாது படிக்கும் பகுதியில், ஒரு புது வரிக்குச் சென்ற வுடன், அதற்கு முந்திய வரிகூட மறந்து போவதுண்டு. ஆதலால், ஒரு பகுதியைக் கருத்தூன்றிப் படிக்கும் இயல்பு அமை வதற்கு, சுருக்கி வரைதற் பயிற்சி ஏதுவாகின்றது.

(2) கணிசப் பயிற்சி

ஓர் உரைநடைப் பகுதியைக் குறித்த அளவிற் சுருக்கிவரைவது எளிதன்று. முதலாவது அதன் பொருள் முழுவதையும் தெளிவாக