உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

அறிந்து, பின்பு முக்கியப் பொருளையும் முக்கியமல்லாத பொருளையும் பிரித்துணர்ந்து, அதன்பின் மூன்றிலொரு பங்காகச் சொற் களை அளந்து கொண்டு, சுருக்கமாகவும் தெளிவாகவும் வலிமை பெறவும் எழுதுவது, பல்வகைத் திறன்களைப் பயன்படுத்தவேண்டிய பயிற்சியாகும். இங்ஙனம், சொல்லையும் பொருளையும் குறித்த அளவிற் கணித்தறிவது, சிறந்த கணிசப் பயிற்சியாம்.

(3) வரைவுப் பயிற்சி

வரைவு வகைகளுள் சுருக்கியெழுதுதலும் ஒன்றாதலின், அதன் பயிற்சி வரைவுப் பயிற்சியுமாகின்றது.

வாழ்க்கையிற் பயன்படல்

சுருக்கிவரைதல், பலர் வாழ்க்கையிற் பலவகையிற் பயன்படு கின்றது. விரிவுரையாளரும் சொற்பொழிவாளரும் உரை நிகழ்த்தும் போது மாணவரும் பிறரும் குறிப்பெடுத்துக் கொள்ளற்கும், நூல் நிலையங்களிற் படிப்போர் நூல்களிலுள்ள முக்கியப் பொருள்களை வரைந்து கொள்ளற்கும், வழக்குத் தீர்ப்பில் வழக்கறிஞரும் தீர்ப் பாளரும் வழக்குப்பற்றிய செ-திகளைச் சுருக்கமா-க் குறித்துக்கொள் வதற்கும், செ-தித்தாள் அறிக்கையாளர் செ-திகளைச் சுருக்கமா - வரைந்தனுப்பற்கும், புகைவண்டிகள் நிலையங்களை விட்டு நீங்கு முன் அவ் வண்டிகளிலுள்ள நண்பருடன் சுருக்கமா-; அளவளா வுதற்கும், வானொலி நிலையங்களிலும் பிறவிடங்களிலும் குறுகிய நேரத்தில் ஒருவர் தம் முக்கியக் கருத்துகளை யெல்லாம் கூறி முடித்தற்கும், சுருக்கிவரைதற் பயிற்சி மிகமிகப் பயன்படுவதாகும்.

ii. சுருக்கி வரையும் முறை

(1) முதலாவது உரைநடைப் பகுதியைக் கருத்தூன்றிப் படித்து அதன் பருப்பொருளை அறிந்துகொள்க. முதன்முறையிற் பொருள் விளங்காவிடின், விளங்கும் வரையும் மீண்டும் மீண்டும் பலமுறை படிக்க.

(2) பருப்பொருளை யறிந்தபின், நுண்பொருளை நோக்கியுணர்க. ஒவ்வொரு சொல்லுக்கும் தொடர்மொழிக்கும் வாக்கியத்திற்கும் பொருள் தெரிந்தாலொழிய, நுண்பொருளை உணரமுடியாது. சில சமையங்களில், சொல்லின் பொருளுணர்ச்சியே முழுப் பகுதியின் பொருளுணர்ச்சிக்கும் அடிப்படையாயிருக்கும். ஆதலால் பொருள்

ஒரு