உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

நல்ல நிலைமைக்குக் கொண்டு வருபவனும், அந் நிலைமை யினின்று தன்னைத் தாழ்த்திக் கொள்பவனும், அங்ஙனமன்றி மேன்மேலும் தன்னை உயர்த்தி இறுதியில் தன்னைத் தலைமையாகச் செ-து கொள்பவனும், தானே யாதலால், ஒவ்வொருவரும் தன்முயற்சியைக் கடைப்பிடித்தல் வேண்டும்.

5. காதல் என்பது அளவிறந்த அன்பு. அது கணவன் மனைவி யரிடை மட்டுமன்று, எந்த இருவரிடையும் நிகழக் கூடியது. அது ஒருதலைக் காதல் இருதலைக் காதல் என இருவகைப்படும். அவற் றுள் இருதலைக்காதல் வா-ப்பது மிகவும் அருமையானது. காத லுக்குக் காட்சியும் கலந்துறவாடலும் வேண்டியதில்லை. உணர்ச்சி யற்ற இருவர் நெடுந்தொலைவி லிருந்துகொண்டே ஒருவரையொ ருவர் காதலிக்கலாம். காதலர் உலகிலுள்ளவரை ஒருவரையொருவர் நினைத்துக் கொண்டே யிருப்பர். அவர் ஒருவருக்கொருவர் உயிரை யும் உவந்தீவர். காதலர் இருவருள் ஒருவர் இறப்பின் ஏனையவரும் உடனிறத்தல் வேண்டுமென்பது பண்டைக் கொள்கை. அஃது இன்றைக் கேற்காது.

பெருக்கி வரைவு

காதலர் இயல்பு

காதலைக் கொண்டவர் காதலர். காதலென்பது அளவிறந்த அன்பு. ஒருவரையொருவர் இன்றியமையாமை என்று அதற்கு இலக்கணம் கூறுவது இன்று பொருந்தாது.

அளவிறந்த அன்புடைய கணவன் மனைவியரே, பொதுவாகக் காதலர் என்று குறிக்கப் பெறுவர். பிறவகை யுறவுடையாரும் காதலரா யிருக்கலாம். பெற்றோரும் பிள்ளையரும் ஒருவகைக் காதலர். அவர் போல் அளவிறந்த அன்புடைய உறவினரும் ஒருவகைக் காதலர். காதலர். உண்மை உண்மை நட்பாளர் ஒருவகைக் காதலர். காதலன் என்னும் சொல், "அறத்தின் காதலன்" (பாகவதம், 1:6:1) என்று மகனையும், "தீயின் காதலன்" (கந்தபுராணம், திருவவதாரப் படலம், 10) என்று நண்பனை யுங் குறித்தது. "கைம்மக வோடுங் காதலவ ரொடும்" (பரிபாடல், 15:47) என்னுமிடத்து, காதலவர் என்னுஞ் சொல் சுற்றத்தாரைக் குறித்தது. ஆகவே, மணம் உறவு நட்பு ஆகிய மூவகைத் தொடர்பு பற்றி, மூவகைக் காதலர் உளர் என்பது தெளிவு.

காதற்கு வேண்டியவர் இருவர். அவருள் ஒருவரிடத்து மட்டுமே காதல் இருப்பினும் இருக்கலாம். அன்றி இருவரிடத்தும் இருப்பினும் இருக்கலாம். இவற்றுள், முன்னது ஒருதலைக் காதலென்றும் பின்னது இருதலைக் காதலென்றும் அழைக்கப்பெறும். கோவலன் கண்ணகி