உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

195

உடம்பையும் பிறர்க்களித்துத் தம் வாழ்நாளை முடிப்பர் அன்புடையார். உடம்பின்றி உலக வாழ்க்கையில்லா மையின், உடம்பைக் கொடுத்தலும் உயிரைக் கொடுத்தலும் ஒன்றே. உயிரைப்போற் சிறந்த பொருள் வேறொன்று மில்லை. ஆதலால், அன்பானது ஈகை யென்னுங் குன்றேறி, உயிரீகை யாகிய கொடுமுடி யடைந்துவிடுகின்றது. என்னே அன்பின் இயல்பு

4.

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானுந் தன்னை நிலைக்கலக்கிக் கீழிடு வானும்

-

நிலையினும்

மேன்மேல லுயர்த்து நிறுப்பானுந் தன்னைத்

தலையாகச் செ-வானுந் தான்.

பெருக்கிவரைவு தன்முயற்சி

முயற்சியில்லாமல் உலகில் ஒன்றையும் பெறமுடியாது. முயற்சி பெரும்பாலும் வெற்றியே தரும். 'முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார்' என்பது பழமொழி. 'ஊக்கமுடைமை ஆக்கத்திற் கழகு' என்றார் ஒளவையார். 'முயற்சி திருவினையாக்கும்' என்றார் வள்ளுவர். முயற்சி, செ-வாரை நோக்கி, தன் முயற்சி பிறர் முயற்சி என இருவகைப்படும். ஒருவன் தன்முயற்சியின்றிப் பிறர் முயற்சி யாலேயே ஒரு காரியத்தைச் செ-யின் அதில் வெற்றி பெறுவது உறுதியன்று. ஒருகால் மிக நெருங்கிய உறவினரே முயற்சிசெ-து வெற்றி விளைவிப்பினும் அது கருதிய அளவு கைகூடியதா யிராது. மேலும் தன்முயற்சியற்றவன் அத்தகைய வெற்றியைக் காத்துக் கொள்வதும் அரிது. இனி, ஒருவன் விரும்பிய பொருளையே அவன் உறவினரும் பெற விரும்பலாம். 'தாயும் பிள்ளையு மானாலும் வாயும் வயிறும் வேறு' ஆதலால், அவரவர் அக்கறைக்கு அவரவரே பாடு படவேண்டும். எவ்வளவு நெருங்கிய உறவினான யிருப்பினும், ஒருவனுக் கிருக்கும் ஆத்திரம் இன்னொருவனுக் கிருக்க முடியாது. ஒரு காரிய வெற்றிக்கு இடை விடாத உழைப்பும் விழிப்பும் பொறையும் பொறுமையும் வேண்டும். அவற்றுள் ஒன்று குறையினும் வெற்றி கிட்டாது. ஆதலின் ஒரு பொருளைப் பெற விரும்புகிறவன் அதற்குத் தானே முயலவேண்டும். ஒரு காரியத்தில் பிறர் முயற்சியும் துணை செ-யுமாயினும், தன் முயற்சி இன்றியமையாத தாகும். ஒரு பொருளைப் பெறுவதென்பதும், ஒரு நிலைமையை அல்லது பதவியை அடைவதென்பதும் ஒன்றே. தன்னை