உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

2. 'காணியாசை கோடி கேடு'

பெருக்கி வரைவு

பேராசை

ஆசை அனைவர்க்கும் உண்டு. அதுவும் ஓரளவு ஒருவர்க்கு இருக்கத்தான் வேண்டும். இல்லாவிடின், ஊக்கமும் முயற்சியும் பிறவா. ஆனால், அது அளவிற்கு மிஞ்சியிருத்தல் கூடாது. அளவுக்கு மிஞ்சிய ஆசை அறிவை மறைத்து மதியை மழுக்கிவிடுகின்றது. அதனால், நாணம் நடுநிலை நன்றியறிவு அன்பு முதலிய நற்பண்பு களை யெல்லாம் இழந்து, பிறர் உரிமையில் தலையிடவும் பிறர் பொருளைக் கவரவும் நேர்கின்றது. இதுமட்டுமா? மிகச் சிறிய பொரு ளுக்காக மிகப் பெரிய பொருளை இழக்கவும் நேர்கின்றது. சிறிய பொருளைத் திருடியும் சிறிய கையூட்டை வாங்கியும், உரிய வேலையும் பெரிய பதவியும் இழந்தவர் எத்தனை பேர்! அரைக் காசிற்காக மதிப்பரிய மானத்தை யிழந்தவர் எத்தனை பேர்! இன்னும் இம்மிக்கு ஆசைப்பட்டு இன்னுயிரை யிழந்தவர் எத்தனை பேர்! இங்ஙனமெல்லாம் பொருளும் மானமும் உயிரும் இழப்பதற்கே பேராசை ஏதுவாயிருத்தலின், பேராசை பெருநட்டமென்பதை யுணர்ந்து அதை விட்டுவிடுதல் வேண்டும்.

3. அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையார் என்பு முரியர் பிறர்க்கு

பெருக்கி வரைவு அன்புடைமை

அன்பானது, உயர்திணையென உயர்த்துச் சொல்லப்படும் மக்கட் கெல்லாம் இன்றியமையாத குணமாகும். அன்பில்லாதவர் மக்கள் என்னும் பெயருக்கு உரியவரல்லர். அவர் மாக்கள் என்று பிரித்துக் கூறப்படுவர். மற்ற உயிர்களுக் கல்லாவிடினும், மாந்தர் அனைவருக்கு மாவது நன்மை செ-யுங் குணமே, அன்பு எனப்படும். அன்பு ஒருவர்க்கிருந்தால், அதை வெளிப்படாதபடி உள்ளத்தில் அடைத்துவைக்க முடியாது. சொல் செயல் என்னும் ஏனை யிருகரண வினைகளாலும் அது வெளிப்பட்டே தீரும். அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன் படுத்துவர். அன்புள்ளவரோ எல்லாப் பொருள்களையும் தம்மால் அன்பு செ-யப் பட்டவர்க்கே பயன்படுத்துவர். இனி, பிறிதின் கிழமைப் பொருள்களை மட்டுமல்ல, வேண்டுமிடத்துத் தற்கிழமைப் பொருளாகிய தம்