உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

2.

193

பொருளுணர்ந்தபின் ஒரு பொருத்தமான தலைப்புக் கொடுத்தல் வேண்டும்.

3. அதன்பின், விளக்கம் நுண்கருத்துகள் ஏது எடுத்துக்காட்டு முதலிய வற்றால், குறித்த பகுதியை விரித்து வரைதல் வேண்டும்.

4. புதிதாகச் சேர்ப்பதெல்லாம் மூலப்பகுதிப் பொருளைத் தழுவியே யிருத்தல்வேண்டும். மூலத்திற்கு மாறானது ஒன்றும் பெருக்கி வரைவதில் இருத்தல் கூடாது.

5. மூலப்பகுதி ஓர் அணியா யமைந்திருந்தால், அதைத் தெளிவான நடையில் விளக்கி வரைதல் வேண்டும்.

ரு

6. ஒரே வாக்கியமா- அல்லது கூற்றாயிருக்கும் மூலப்பகுதி, ஒரு படிப்பனை போன்ற முடிபாயிருக்குமாதலின், அம் முடிபிற்கேற்ற படி முறைக் கருத்துகளை வரிசை பிறழாது அமைத்து வரைதல் வேண்டும்.

7. மூலப்பகுதி ஒரு பாகியாயிருக்குமாயின், அதிலுள்ள ஒவ்வொரு கருத்தையும்பற்றி ஒவ்வொரு பாகி வரைதல் வேண்டும்.

8. பெருக்கி வரைந்தவுடன் பிழைதிருத்தி, இன்றியமையாததாயின், செவ்வைப் படியும் செ-துகொள்ளலாம்.

போலிகைகள்

1. சொல்வதெளிது செ-வதரிது

பெருக்கி வரைவு செ-து காட்டல்

ஒருவன் எதையும் சொல்லிவிடலாம். ஆனால், சொல்லிய வண்ணம் செ-துகாட்டுதல் அரிதாகும். செ-துகாட்டல் என்பது, சொல் லியபடி செ-தலும் சொல்லியபடி ஒழுகுதலும் என இருதிறப்படும். ஒரு வேலையிற் குறை கூறுகிறவன், தான் அதைக் குறையின்றிச் செ-யக்கூடியவனாயிருத்தல் வேண்டும். கட்டத் தெரியாதவன் கட்டின வீட்டிற்கு வக்கணை சொல்லக்கூடாது. ஏவுகிறவன் ஒரு சொல்லில் ஏவிவிடலாம்; ஆனால், இயற்றுகிறவனுக் குத்தான் தலைச்சுமைப் பளுவு தெரியும். இங்ஙனமே, ஒழுக்க வகை யிலும் கற்பிப்பு எளிது; கைக்கொள்வு அரிது. ஒழுக்கத்தைக் கற்பிப் பவன் ஒழுகியுங் காட்டுதல் வேண்டும். அல்லாக்கால், கற்பிப்பு வலியற்றுப்போவதுடன் பழிப்பிற்கும் இடமாம்.