உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

புதுமொழிப் பயிற்சிக்கு ஒலித்தட்டுகள் உண்டு.

செ-திச் சுருக்கங்கள் வெளியிடப்பெறுவதால், வேண்டிய செ-தி களை விரைந்து படித்துக்கொள்ளலாம்.

அமெரிக்கர் பேச்சும் எழுத்தும் மிகச் சுருக்கம். உறவினரொடு அளவளாவுவதும் ஊண் வேளையில்தான் நிகழும். குட்டிக் கதை களைத்தாம் அவர் விரும்பிக் கேட்பர்.

அமெரிக்காவில் முக்கியமான இடங்களிலெல்லாம் திரைப்பட வரங்குகளிருப்பதாலும், ஒரே படம் நாள் முழுதும் மீண்டும் மீண்டும் நிகழ்வதாலும், எவரும் என்றும் எப்படமும் பார்க்க இயலுகின்றது.

அமெரிக்கர், பிற வினைகளைப் போன்றே உறக்கத்தையும் குறுகிய காலத்தில் நிகழ்ந்துகின்றனர். ஆயினும், அவர் சராசரி 61 ஆண்டுகள் வாழ்வதால், நாம் அச்சமின்றி அவரை வினைசெ- முறை யிலும் பின்பற்றலாம்.

9. பெருக்கி வரைதல் ( Expansion of Passages) i. முன்னுரைக் குறிப்புகள்

ஒரு வாக்கியத்தை அல்லது கூற்றை ஒரு பாகியாகவும், ஒரு பாகியைப் பல பாகிகளுள்ள ஒரு சிறு கட்டுரையாகவும், விரித் தெழுதல் பெருக்கி வரைதலாகும். இது சுருக்கி வரைதலுக்கு நேர் எதிரான பயிற்சியாம்.

நூலாசிரியருக்கும் சொற்பொழிவாளர்க்கும் இப் பயிற்சி மிகப் பயன்படும். ஒரு சிறுகதையைப் பெரிய நூலாக விரிப்பதும் பெருக்கி வரைதலேயாயினும், அஃது ஆசிரியர்க்கேயன்றி மாணவர்க்குரிய தாகாமையின், இங்கு விடப்பட்டுள்ளது.

ஒரு வாக்கியத்தை ஒரு பாகியாக விரிக்கும் பயிற்சியைக் கீழ் வகுப்பு மாணவர்க்கும், ஒரு பாகியை ஒரு கட்டுரையாக விரிக்கும் பயிற்சியை மேல்வகுப்பு மாணவர்க்கும், வைத்துக்கொள்ளலாம்.

ii. பெருக்கி வரையும் முறை

1. முதலாவது, பெருக்கி வரையவேண்டிய வாக்கியத்தை அல்லது பகுதியை நன்றாகப் படித்து, அதன் பொருளைத் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும்.