உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

191

வழிப்போக்குச் சீட்டு சிற்றுண்டி முதலியவற்றின் விற்பனையும், அமெரிக்காவில் பொறியினால் நடைபெறுகிறது. வானளாவும் மாபெரும் மாடிக்கட்டடங்களில் வாழ்க்கைக்கு வேண்டிய பலபொருள் வசதிகளும் ஒருங்கேயமைந்துள்ளன. சிலர் தொலைபேசி வாயிலாக வும் கடைகாரருக்கு ஆணை கொடுக்கின்றனர். பொருள்களை விரைந்து பெறுதற் குரிய எல்லா வசதிகளையும் கடைகாரர் செ-து வைத்திருக்கின்றனர்.

செ-திதாள்களை ஒருவரும் அருகிருந்து விற்பதில்லை. அவற்றை வாங்குபவர் தாமே அருகிலுள்ள பெட்டியிற் காசைப் போட்டு விடுகின்றனர்.

அமெரிக்க நாணயசாலைகளில் ஒரு நிமையத்தில் காசோலை யை மாற்றலாம்; இரவிலும் பணத்தை இட்டுவைக்கலாம்.

நால்வகை யளவீடுகளும் பத்தால் வகுக்கக்கூடிய பதின்முறைத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள. பல வணிகர்,ஓர் ஆண்டை, ஒவ்வொன் றும் இருபத்தெட்டு நாட்கொண்ட பதின்மூன்று மாதங்களும் மேலொரு நாளுமாக வகுத்திருக்கின்றனர்.

அமெரிக்காவில்,

ஏராளமான கற்சாலைகளும் இருப்புப் பாதைகளும் வானூர்தி நிலையங்களும் உள. நால்வருள் ஒருவர்க்குச் சொந்த இயங்கியுண்டு. மட்டக்கடப்பிற் கிடமில்லாதவாறு, வேண்டு மிட மெல்லாம் கீழ்ப்பாதையும்; சுரங்கப்பாதையும் அமைக்கப் பட்டுள இருப்புப்பாதைக ளெல்லாம் ஒரே அளவின.

மாடிக் கட்டடங்களில் தூக்கியும் சுழல்படிக்கட்டும் உண்டு. அஞ்சல் முத்திரைகள் பல கடைகளிலும் கிடைக்கும்.

தொலைக்காட்சியும் தொலைக்காட்சி யஞ்சலும், அமெரிக்கா வில் மிகுதியா-நடைபெறுகின்றன.

அமெரிக்கக் கல்வித் திட்டம் மிகச் சிறந்தது. எவரும் எங்கும் என்றும் வேண்டிய கல்வியை விரைந்து பெறலாம். மாணவர் கல்வி பயின்றுகொண்டே, விடுமுறைக்காலத்தில் வேலைசெ-து பொருளும் ஈட்டிக்கொள்ளலாம். பகலில் கற்க வசதியில்லாதவர்க்கு இராக் கல்வி நடைபெறுகின்றது. தேர்வு விளைவு விரைந்து தெரிவிக்கப் பெறு கின்றது.