உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

அமெரிக்கத் திரைப்படவரங்குகள் போக்குவரத்து மிக்க இடங் களிலெல்லாம் இருப்பதாலும், அவற்றில் முற்பகல்முதல் பின்னிரவு வரையும் ஒரே படம் மீண்டும் மீண்டும் இடைவிடாது நடைபெறு வதாலும், ஒருவர் அண்மையிலும் விரும்பிய நேரத்திலும் படம் பார்க்க இயல்கின்றது. அவற்றிற்குரிய கட்டணமும் ஒரேயளவாத லால், சீட்டு விற்பனையும் விரைந்து நடைபெறுகின்றது.

இங்ஙனம் ஒவ்வொரு வினையின் காலத்தையுங் குறுக்கிக் குறுக்கி, கடைசியில் உறக்கத்தையுங் குறுக்கிக்கொண்டனர் அமெரிக்கர். இதனால், அவருக்கு அமைதியே யில்லையென்று நம்மவருட் சிலர் குறை கூறலாம். ஆயின், அமெரிக்கர் சராசரி வாழ்நாள் 61 ஆண்டு என்பதையும், இந்தியர் சராசரி வாழ்நாள் 26ஆண்டே என்பதையும் நோக்கும்போது, அவரது வாழ்க்கை சுறுசுறுப்பும் நமது வாழ்க்கை சோம்பலுமே நிறைந்தனவென்று கொள்ள வேண்டியிருக்கின்றது. ஒழுக்கம் வா-மை பிறர்மாட்டன்பு முதலிய பண்பாட்டு வகையிலும், அமெரிக்கர் வாழ்க்கை இற்றை யிந்தியர் வாழ்க்கையினும் ஏற்றம் என்பது தேற்றம். ஆதலால், தற்காலக் கல்வியாகிய அறிவியற் கலை யில் நாம் எங்ஙனம் அவரைப் பின்பற்றுதல் தகுமோ. அங்ஙனமே சுறுசுறுப்பிலும்

வினைவிரைவிலும் அவரைப் பின்பற்றுதலும் தகும் என்க.

சுருக்கி வரைவு

அமெரிக்கர் காலத்தைப் பயன்படுத்துதல்

இக்காலத்தில், காலத்தின் அருமையை யுணர்ந்து, பொறித் துணையினால் சுருக்கமான காலத்தில் பெருக்கமான வேலையைச் செ-துவருபவர் மேனாட்டாரே. அவருள்ளும், அமெரிக்கர் சிறந்தோ ராவர்.

பற்பல சமையல் வினைகளும் துப்புரவு வினைகளும் பொருள் களைத் தட்ப வெப்பப்படுத்தும் வினைகளும், பிறவும், அமெரிக் காவில் பொறிகளாலேயே செ-யப்படுகின்றன.

இயற்கைமழை பெ-யாத காலத்தில், அமெரிக்க வுழவர் செயற்கை மழையைப் பெ-வித்துக்கொள்கின்றனர். அவர் பெரும் பண்ணையாள ராதலின், பெருவாரியாகப் பொருள்களை விளைவித்து, அறுவடைக் காலத்தில் மாணவரையுங் கூலிக்கமர்த்திக் கொள்கின்றனர்.