உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

189

கின்றது. ஒரு தேர்விற்குக் குறித்த கடவைக் (course) காலத்தை முடிக்க வேண்டுமென்னும் கட்டாயமில்லை. ஒரு மாணவன், தன் திறமைக் குத்தகத் தனக்கு வேண்டுங் கல்வியை எவ்வளவு விரைந்தும் முடித்துக் கொள்ளலாம். அமெரிக்க மக்களுக்குப் போதிய பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களுமிருப் பதால், மாணவர் எவரும் இட மில்லாமற் காத்திருக்கவும் காலத்தை வீணா-க் கழிக்கவும் வேண்டிய தில்லை. மாநகர்தொறும் பல்கலைக் கழகமிருப்பதால், மாணவர் மேற் கல்விக்கு நெடுந்தொலைவு செல்ல வேண்டியதுமில்லை. விடுமுறைக் காலத்திலும் நாள்களிலும், பயிர்த் தொழிற் பண்ணை, உண்டிச்சாலை, தொழிற்சாலை, அஞ்சலகம், பெருங்கடை, திரைப் படவரங்கு முதலிய வற்றில், மாணவர் வேலை செ-து தம் உயிர் வாழ்க்கைக்கும் கல்விக்கும் வேண்டுமளவு பொருளீட்டிக் கொள் கின்றனர். இவ் வகையில், கல்விப் பயிற்சி முடியும்போது தொழிற் பயிற்சியும் முடிகின்றது. பகலில் வேலை பார்க்கும் அலுவலாளர்க் கென்று இராப் பல்கலைக்கழகங்கள் நடை பெறுகின்றன. தேர்வு விடைத் தாள்கள் சுருக்கானமுறையில் திருத்தப்பெற்று, விளைவுகள் விரைந்து

விளம்பப்பெறுகின்றன.

புதுமொழிப் பயிற்சிக்கு ஒலித்தட்டுகளிருப்பதால், ஆசிரிய ருதவியின்றியே ஒரு புதுமொழியை அமெரிக்கர் விரைந்து கற்றுக் கொள்கின்றனர்.

செ-தித்தாள்கள் பொதுவா- விரிவுற்றிருப்பதால், அவற்றை முழுதும் படித்தற்குப் போதிய நேரம் பலர்க்கில்லாமைப்பற்றி, அவற் றிலுள்ள முக்கியமான செ-திகளின் சாரத்தைமட்டும் திரட்டிக்கூறும் செ-திச் சுருக்கம் (Digest) என்னும் தாள்கள், பொருள்வாரியாக அமெரிக்காவில் வெளியிடப்பெறுகின்றன. சிற்றுண்டியருந்தும் போதே பலர் செ-தித்தாளைப் படித்துவிடுகின்றனர்.

பேச்சும் எழுத்தும்கூட அமெரிக்கர் சுருக்கமாகவே நிகழ்த்து கின்றனர். வேலைநேரத்தில் அவர் பிற பேச்சுப் பேசுவதில்லை. உறவினரொடு உரையாடுவதையும் ஊண் வேளையில் வைத்துக் கொள்கின்றனர். குட்டிக் கதைகள் அவருக்கு மிக விருப்பம். ஆங்கிலச் சொற்களிலுள்ள ஊமை யெழுத்துகளை யெல்லாம் விலக்கி யெழுத வேண்டுமென்பது அவர் கருத்து. ஆயின் அதற் குரிய அதிகாரம் இங்கிலாந்திலிருப்பதால், அவரால் அது செ-ய முடியவில்லை.