உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

அமெரிக்காவில், 33 இலக்கம் கல் கற்சாலைகளும், 227 ஆயிரம் கல் இருப்புப்பாதைகளும், ஏழாயிரம் வானூர்தி நிலையங் களும் உள. அங்கு நால்வருள் ஒருவர்க்குச் சொந்த இயங்கி உண்டு; ஐந்திலக்கம் பேருக்கு வானூர்தி இயக்கவும், ஆடவர், பெண்டிர் அனைவர்க்கும் இயங்கி இயக்கவும் தெரியும். இயங்கியும் புகை வண்டியும் வானூர்தி யுமாகிய பொறியூர்திகளே அங்குள. அவை யனைத்தும் பொதுவா- வேகமா-ச் செல்லும்

செல்கின்றன, வெவ்வேறு வேகமா-ச்

யங்கிகட்கு, சாலைகளில் வெவ்வேறு பாதை கள் விடப்பட்டுள்ளன. போக்குவரத்துக் கட்டுப்பாடும் மூட்டைகளை இடம்பெயர்ப்பதும் பொறிவாயிலா- நடைபெறுகின்றன. வேண்டு மிடமெல்லாம் கீழ்ப் பாதைகளும் சுரங்கப்பாதைகளு மிருப்பதால், மட்டக்கடப்பு (level crossing) என்பது அங்கில்லை. இதனால், வழியிடை நில்லாமலும் காத்திராமலும் வண்டிகள் நேரே செல்லலாம். இருப்புப் பாதைகளெல் லாம் ஒரே அளவான அகலப் பாதை யாதலால், வண்டிகள் மாறாமல் எங்கும் செல்ல முடியும். பெரு வணிகரும் தொழிற்சாலை முதலாளி களும் சொந்தமாகக் கூண்டுச் சகடுகளும் கட்டைச் சகடுகளும் வைத்திருப்பதால், அவர்கள் தங்கள் பொருள்களை இருப்புப் பாதை வழியாக விரைந்து வேறிடம் சேர்ப்பதற்கு வசதியாயிருக்கின்றது.

மாடிக் கட்டடங்களில் தூக்கியும் (lift) சுழல் படிக்கட்டும் (escalator) இருப்பதால், விரைந்து வேண்டும் மாடிக்குச் செல்ல முடியும். கடிதம் முதலியவற்றை மேலிருந்து கீழிடச் சுவர்க் குழா-கள் அமைக்கப் பட்டுள.

அஞ்சற் போக்குவரத்து விரைந்து நடைபெறும் பொருட்டு, அஞ்சல் முத்திரைகள் பிற கடைகளிலும் விற்கப்படுகின்றன.

தொலைக்காட்சியும் (television) தொலைக்காட்சி யஞ்சலும் அமெரிக்காவில் மிகுதியாக நடைபெறுகின்றன. தொண்ணூற்றெட்டுத் தொலைக்காட்சி நிலையங்களும் (television transmitters) 23 இலக்கம் தொலைக்காட்சிக் கருவிகளும் (televioion sets), இன்று அங்குள. ஒரு நொடிக்கு 186 ஆயிரம் கல் தொலைவு, தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை அஞ்சல் செ-யலாம்.

அமெரிக்கக் கல்வித் திட்டம் மிகச் சிறந்த முறையில் அமைந் துள்ளது. அவரவர்க்கு வேண்டிய கல்வியே அங்கு கற்பிக்கப்படு