உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

187

ஒருங்கே பெறுவதற் கேதுவா யிருக்கின்றனது. பெரும்பாலும் வீடுதொறும் தொலைபேசி (telephone) இருப்பதால், சிலர் தொலைபேசி வாயிலாகவே கடைகாரருக்கு ஆணை கொடுத்து, தமக்கு வேண்டிய பொருள்களைப் பெற்றுக்கொள்கின்றனர். பண்டிகை நாள்களிலும் விழாக்காலங்களிலும் விற்பனை நெருக்கடியைச் சமாளிப்பதற்கு, மிகைப்படியான ஆள்களைக் கடைகாரர் அமர்த்திக் கொள்கின்றனர். ஒருவர்க்கு வேண்டிய உடை ஒருமணி நேரத்திற் கிடைக்குமாறு, தையற்சாலைகளில் விரைந்து வேலை நடைபெறு கின்றது. பெருங்கடைகட் கெல்லாம் நாடுமுழுதுங் கிளைகளிருப்ப தால், ஓரூரில் ஒருவர் விரும்பியபடி இன்னோரூரில் இன்னொருவர் ஒரு பொருளை விரைந்து பெறுவதற்கு வசதியாயிருக்கின்றது.

செ-தித்தாள்களை விற்பவர் அவற்றை ஓரிடத்தில் அடுக்கி வைத்துவிட்டுச் சென்றுவிட, அவ் வழியப் போவார் வருவார் தாமாகத் தமக்கு வேண்டியவற்றை யெடுத்துக்கொண்டு, அவற்றிற் குரிய காசை அங்குள்ள பெட்டியிற் போட்டுவிடுகின்றனர். இதனால், செ-தித்தாள் விற்பவர் அந் நேரத்தில் வேறு வேலை செ-ய இயலு கின்றது. இதற்கு அமெரிக்கரின் வா-மையும் நேர்மையும் துணை செ-கின்றன.

அமெரிக்க நாணயசாலைகளில் ஒரு நிமையத்திற்குள் காசோ லையை (cheque) மாற்றிவிடலாம். இரவில் பணத்தை இட்டு வைத் தற்கு வசதியும், வழிப்போக்கர் விரைந்து மாற்றுவதற்கு வானூர்தி நிலையங்களிற் கிளைகளும் அமெரிக்க நாணயசாலைகள் ஏற்படுத்தி யுள்ளன.

பொருள்களை விரைந்து அளவிடுதற்கு, எண்ணலைப் போன்றே எடுத்தல் முகத்தல் நீட்டல் என்னும் ஏனை அளவீடுகளையும், பப்பத்து மடங்கா- உயர்கின்ற அல்லது பத்தால் வகுக்கக்கூடிய பதின்முறைத் திட்டத்தில் அமைத்துள்ளனர் அமெரிக்கர். நூறு சதம் ஒரு டாலர். நூறு இராத்தல் ஓர் அந்தர். பத்துப் படைச்சால் (furlong) ஒரு கல் (mile). இத்தகைய அளவீட்டால் வசதியேற்படுவதுடன் நேரம் மீக்கப்படு கின்றது. இனி, ஆண்டைக்கூட, ஒவ்வொன்றும் இருபத் தெட்டு நாள்களைக் கொண்ட பதின்மூன்று மாதங்களும் மேலொரு விடுமுறை நாளுமாக வகுத்து, இம் முறையையே பல வணிகர் அங்கு கையாண்டு வருகின்றனர். இது நேரத்தை மீப்பதுடன், எத்துணை ஒழுங்கும் வசதியுமாக இருக்கின்றது!