உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

சமையல், தயிர்கடைதல், அப்பம் (ரொட்டி) சுடுதல் முதலிய உணவாக்க வினைகளும்; வீடுவாசல் கூட்டுதல், சாலை பெருக்குதல், கலங் கழுவுதல், துணி துவைத்தல் முதலிய துப்புரவு வினைகளும்; ஊணுடைகளையும் பிற பொருள்களையும் குளிரவைத்தல் சுடவைத் தல் காயவைத்தல் புலர்த்துதல் முதலிய தட்ப வெப்பப்படுத்து வினை களும்; மடித்தல் விரித்தல் முதலிய வசதிவினைகளும், அமெரிக் காவில் பெரும்பாலும் மின்சாரப் பொறிகளாலேயே செ-யப்படு கின்றன.

அமெரிக்காவில் மழை பெ-யாவிட்டால் உழவுத் தொழில் தடைப்படுவதில்லை. மழை பிந்திப் பெ-யுமட்டும் காத்திராமலும் காலத்தை வீண்போக்காமலும், செயற்கை மழையை வேண்டுமளவு வருவித்துக் கொள்கின்றனர், அமெரிக்க உழவுப் பண்ணையாளர். அவருள் ஒவ்வொருவரும் பெருநிலக் கிழவராதலின், ஒவ்வொரு விளையுளிலும் ஏராளமாகப் பொருள் விளைவிக்கின்றனர். மழை பெ-வித்தல் முதல் அறுவடைவரையும் ஒவ்வொரு பயிர் வினையும் பொறியினாலேயே செ-யப் படினும், பருத்தி வெடிப்புப் போன்ற விளையுட்காலத்தில் பெருந்தொகையினரான ஆள்கள் தேவையா யிருத்தலின், மாணவரும் உழவர்க்குதவுமாறு, அக்கம் பக்கத்திலுள்ள பள்ளிகள் சாத்தப்படுகின்றன. அரசியலாரும் அதற்கிசைந்துள்ளனர். இதனால், பயிர்த்தொழில் விரைந்து நடப்பதுடன், மாணவர்க்கும் ஊதியங் கிடைக்கின்றது.

கட்டடவேலை யுட்பட எல்லாக் கைத்தொழில்களும் அமெரிக்கா வில் பொறியினாலேயே செ-யப்படுகின்றன.

இயங்கிகளிலும் புகைவண்டி நிலையங்களிலும் வழிப்போக்குச் சீட்டுவிற்பதும், சில சிற்றுண்டிச் சாலைகளில் சிற்றுண்டி விற்பதும், வாழ்நாட் பாதுகாப்பகங்களில் ஒப்பந்தமுறி (Insurance Policy) தருவதும், அமெரிக்காவில் பொறிகளே, வணிகமும் விற்பனையும் விரைந்து நடைபெறுதற்கு அங்கு, பற்பல வசதிகள் செ-யப்பட்டுள்ள நாற்பது ஐம்பது நிலைமாடங்கள் அங்கு பெருந்தொகையாயுள்ளன. ஒவ்வொரு கட்டடத்திலும், குடியிருப்பகங்கள், பல்பொருள் கடைகள், தையற்கடை, சலவைச்சாலை, முடிதிருத்தகம் (saloon), மருத்துவ சாலை, அஞ்சலகம் (post Office), விளையாட்டிடம், பூங்கா, இயங்கிக் கொட்டில் (garrage) முதலியன விருப்பதால், ஒரேயிடத்தில் பல வசதிகளையும்