உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

185

பெயர்த்தெழுதித் தொகுத்து வைத்தலையே விரதமாகக் கொண்ட சில புண்ணியசாலிகளாலேயே தாம் உருக்கொண்டிருத்த லையும் நன்கு புலப்படுத்தின.'

95

பழம்படிகளுட் பல, பிழைநிரம்பி, தாம் படிக்கப்படாமல் தம்மைப் படியெடுத்தவ ராலேயே உருக்கொண்டிருத்தலைப் புலப்படுத்தின.

66

'குழந்தையைப் பெறும்போது படுந்துன்பமெல்லாம் அக் குழந் தையைக் கண்ட காலத்திலே மறைந்துவிட, தா- பெரிய இன்பத்தை அடைகின்றாள். அதுபோலவே..."

குழந்தையைப் பெற்றவுடன் வேதனையை மறக்கும் தா-போல.

"புலவர் சிந்தித்ததை யெல்லாம் தரும் மணிபோன்ற சிந்தா

மணியில்

சிந்தாமணியில்.

"எவ்வகை யொளியிலும் எவ்வகைக் கருவிகொண்டும் பார்க்க முடியாதவன்."

குருடன்.

குறிப்பு: ஓர் உரைநடைப் பகுதியில், முக்கியமான பொருள் களையும் அல்லாதவற்றையும் இன்னின்னவென்று நிலையாக வரம்பிட்டுக் கூறமுடியாது. சுருக்கவேண்டும் அளவிற்குத் தக்கவாறு, ஒரு பொருள் முக்கியமானதாகவோ அல்லாததாகவோ கருதப் படலாம். ஒருமுறை சுருக்கி வரைந்ததையே மீண்டும் சுருக்கிவரை யின், முன்னதில் முக்கியமாயிருந்தது பின்னதில் அல்லாததா-ப் போம்.

போலிகை

காலம் பொன்னினும் மணியினும் மதிப்புயர்ந்த தென்பது மட்டுமன்று, உயிரைப்போன்றே அருமையான தென்பதும், இக் காலத்து உணர்ந்தவர் மேனாட்டார். எவ்வினையையும், பொறியின் துணைகொண்டு எவ்வளவு விரைவாகவும் பேரளவாகவும் செ-ய முடியுமோ, அவ்வளவு விரைவாகவும் பரவாகவும் செ-து வரு கின்றனர், மேனாட்டாரெல்லாரும். அவருள்ளும், அமெரிக்கர் ஓரிரு துறைகளில் ஒருபடி மேற்சென்றுள்ளனர். வாழ்நாட் காலத்தின் அருமையை நன்றாயுணர்ந்து, அதனாற் பெறக்கூடிய முழுப் பயனையும் எல்லாத் துறையிலும் பெற்று வருபவர் அமெரிக்கரே.