உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(ii) சுருக்கி வரைவு ஒரே தொடர்புற்றிருத்தல் வேண்டும். அது பல பகுதிகளாகவும் பாகிகளாகவும் பகுக்கப்பட்டிருக்கலாம். ஆயி னும், அவை பிளவுபட்ட கூறுகளாயிராது ஒரே பொருள் தொடர்பு கொண்டிருத்தல் வேண்டும்.

(iii) சுருக்கி வரைவு முழுநிறைவுள்ளதா யிருத்தல் வேண்டும். அதாவது, மூலத்தை நோக்காமலே அதன் பொருள் முழுவதையும் தெளிவாக அறிந்துகொள்ளத் தக்கதா- இருத்தல் வேண்டும்.

(iv) சுருக்கி வரைவு ஓர் உரைநடைப் பகுதியின் சாரமே யாதலால், அதில் எத்தகைய சொந்தக் குறிப்பும் கூற்று மிருத்தல் கூடாது. மூலத்திலுள்ள கருத்தை மாற்றுதல் திருத்துதலுங் கூடா. புதுச்சேர்க்கை ஒருசிறிது மில்லாமல், முழுதும் மூலத்திலுள்ளதாயே யிருத்தல்

வேண்டும்.

அணிகளையும் நெடு வாக்கியங்களையும் பொருள் கெடாத வாறு மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

(6) கரட்டு வரைவு முடிந்தவுடன் அதிலுள்ள சொற்களை எண்ணிப் பார்த்துக் குறைக்க வேண்டியவற்றைக் குறைத்துக் கொள்ளுதல் வேண்டும்; திருத்தவேண்டியவற்றையுந் திருத்திக் கொள்ளலாம்.

(7) பின்னர், செவ்வைப் படியெடுத்தல் வேண்டும்.

iii. மூலத்தைச் சுருக்குவதற்குக் கையாளவேண்டிய வழிகள்

(1) முக்கியமல்லாத பொருள்களை விட்டுவிடல். வேண்டா விடத்து, எடுத்துக்காட்டு விளங்கங்களையும் விட்டுவிடலாம்.

(2) கூறியது கூறலை விலக்கல்.

எ-டு: "போருக்குச் சென்றவரெல்லாம் மடிந்துவிட்டனர். அவருள் ஒருவராவது திரும்பி வரவில்லை.'

55

போருக்குச் சென்றவரெல்லாம் மடிந்துவிட்டனர்.

(3) நெடுவாக்கியங்களைக் குறுவாக்கியங்கள் அல்லது தொடர் மொழிகளாகவும், தொடர்மொழிகளைச் சொற்களாகவும், சுருக்குதல்.

எ-டு: "பழைய பிரதிகளுட் பல, இனி வழுப்பட வேண்டுமென்பதற்கு இடமில்லாமற் பிழை பொதிந்து, அநேக வருடங்களாகத் தம்மைப் படிப்போரும் படிப்பிப் போரும் இல்லை என்பதையும், நூல்களைப்