உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

நெடுந்தொலைவி லிருந்துகொண்டு ஒருவரை யொருவர் காதலிக்கும் உறவுக் காதலரும் என்றுமுளர்.

காதல், ஏனை இம்மையின்பங்க ளெல்லாவற்றினும் இனியதோர் உணர்ச்சியைத் தருதலானும், மனத்தை முற்றுங் கவ்விக் கொள்ளுத லானும், காதலால் ணைக்கப்பட்ட இருவர் ஒருவரையொருவர் நினைக்காமல் இமைப்பொழுதும் கழித்தல் அரிது.

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலுங் கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

காதலர், ஓருயிரும் ஈருடலும் என்று சொல்லுமாறு ஒத்த உணர்ச்சி யும் ஒன்றிய பிணைப்பு முடையவராதலின், அவர் இரு கிழமைப் பொருள் களையும் ஒருவர்க்கொருவர் உவந்தீவர் என்று சொல்லவே வேண்டுவ தில்லை.

காதலர் உயிர்வாழும்போது, ஒருவரையொருவர் துன்பத்தி னின்று மீட்டற்கு உடம்பையுங் கொடுத்துதவுவது தலைசிறந்த பண்பா யினும்; ஒருவர் இறந்தபின் அவருடைய பிரிவாற்றாது, இன்னொரு வரும் உடனிறத்தல், அத்துணைச் சிறந்ததன்று. கண்ணகி போன்றார், தமக்கு மகப்பேறின்மையானும், தாம் செ-யக் கூடிய பொதுநலத் தொண்டின்மையானும், தம் மெல்லியற் பெண்பான்மையானும், தன் கணவரிறந்தபின் பிரிவாற்றாமைபற்றி உயிர் துறத்தல் ஒப்புக் கொள்ளக் கூடியதாயினும், ஆடவரும் பொறுப்புள்ள வரும் தம் காதலரிறந்தபின் அங்ஙனஞ் செ-தல் இக்காலத்துப் போற்றத் தக்க தன்று. காதலர் உடனிறப்பால், இறந்தவர் மீளாமையானும், சிலவிடத்துப் பொறுப்பும் பொதுநலத் தொண்டும் தவறுதலானும், ஒருவர்க்கோ பலர்க்கோ உதவி செ-யக்கூடியவரெல்லாம் எக்காரணத்தையிட்டும் தற்கொலை செ-யாதிருத்தல், தப்பாது மேற்கொள்ளக்கூடிய தலை யாய கடமையாம். பிசிராந்தையாரும் பொ-யாமொழிப் புலவரும், பின்னுங் கொஞ்சக் காலமிருந்து தம் குடும்பத்திற்கும் தமிழுலகிற்கும் உதவியிருக்கலாம். மகமதுக்கான் இறந்தது கண்டு செயசிங்கும் இறந்த தனால், வெற்றி தோல்வியாக மாறிச் செஞ்சி யரசழிந்ததுடன், அரசி யுட்பட அரண்மனை மகளிர் பலர் வேதனைப்பட்டு இறக்கவும் நேர்ந்தது. கலிப்பகையார் இறந்தது கேட்டவுடன் திலகவதியாரும் இறந்திருப்பின், திருநாவுக்கரசர் வாழ்ந்திருப்பரோ? அவர் தேவார முந் தோன்றியிருக்குமோ? கபிலர்கூடக் கொஞ்சக்காலம் உயிர் வாழ்ந்திருப்பின், பாரி மகளிர்க்கு எத்துணை ஆறுதலாயிருந் திருக்கும்?