உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

199

ஆதலால், காதலர் உடனிறத்தல் வேண்டுமென்பது, பண்டைக் காலத்து உயரிய கொள்கையா-ப் போற்றப்பட் டிருந்திருப்பினும், இக்காலத்திற் கேற்றகாதாதலின், ஒருவர் தம் காதலர் பிரிவால் நேரும் எத்துணைத் துயரையும் பொறுத்துக்கொண்டு, தம் கடமையை நிறை வேற்றுவதே தலையாய செயலாம்.

1.

பயிற்சி 1

பின்வருபவற்றை ஒவ்வொரு பாகியாகப் பெருக்கிவரைக:-

மரம் நட்டவன் அதன் கனியை நுகர்வது அரிது.

2. 'தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்'.

3. 'தன் குற்றந் தனக்குத் தோன்றாது'.

4. மரம் நல்லதென்பதும் கெட்டதென்பதும் அதனதன் கனியால் அறியப்படும்.

5. பெற்றோரன்பும் பிள்ளைகளைக் கொல்லும்.

6. 'காக்கைக்குந் தன் குஞ்சு பொன்குஞ்சு'.

7.

காகங்கள் விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை. ஆயினும், அவற்றையுங் கடவுள் காத்துவருகின்றார்.

8. 'தன்னை யறிந்தவன் தலைவனை யறிவான்'.

9. ஆளப்படுகிறவனே ஆளத்தெரிந்தவன்.

10. வாரி யிறைத்தும் வளவனாகிறது முண்டு. இறுகப் பிடித்தும் ஏழையாகிறது முண்டு.

11. 'தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்;

12.

தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்'.

பொ-சொல்லி வாழ்ந்தவரும் உளர்; மெ-சொல்லித் தாழ்ந்தவரும் உளர்.

13. கல்லாத பேர்களே நல்லவர்கள், நல்லவர்கள்.

14. எழுநிலை மாடம் கால்சா-ந் துக்குக்

கழுதை மே-பா ழாகினு மாகும்.