உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

207

இலக்கண இலக்கிய நூலும் இழைநூல் போன்றதே. ஒரு நூலாசிரியன் நூல் நூற்கும் பெண்டு போன்றவன். நூல் நூற்கும் பெண்டு, கதிரையுங் கையையுங் கருவியாகக் கொண்டு, பஞ்சி லிருந்து இழையிழுத்து நூல்நூற்பது போல; நூலாசிரியன், மதியையும் வாயை யுங் கருவியாகக் கொண்டு சொற்களாற் சூத்திரம் அல்லது செ-யுள் செ-து நூலியற்றுகின்றான்;

என உவமையாக மாற்றிக்கொள்ளலாம்.

vi. பொழிப்புரை வரையும் முறை

1. பொழிப்புரை வரையுமுன், மூலப்பகுதி முழுவதையுங் கருத் தூன்றிப் படித்தல் வேண்டும். முதன்முறை விளங்காவிட்டால், மீண்டு மொருமுறை, அல்லது பலமுறை படித்து, முதலாவது அதன் பருப் பொருள் முழுவதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

2. பருப்பொருள் அறிந்தபின், நுண்பொருளைக் கூர்ந்து நோக்கி யுணர்தல்வேண்டும். பருப்பொரு ளிடையிடையுள்ள சிறு செ-தி களும், அடைமொழித் தொடர்ப் பொருளும், அருஞ்சொற் பொருளும், அணிப்பொருளும் நுண்பொருள்களாம். இவற்றையெல்லாம் உணர்ந்தபின் மூலத்தின் பொருள் முழுதுங் கோவைபட விளங்கித் தோன்றும். வீட்டுப் பயிற்சியாயின், அருஞ்சொற் பொருளை யெல்லாம் அகராதியைப் பார்த்தறிந்து கொள்ளல் வேண்டும். வகுப்புப் பயிற்சி யிலும் தேர்வு வரைவிலும், முன்னறியாத அருஞ் சொற்கள் எவையேனு மிருப்பின், இடம் நோக்கியும் முன்பின் வந்துள்ள சொற்களைக் கொண்டும், அவற்றின் பொருளை ஊகித்துக் கொள்ளல் வேண்டும்.

3. மூலத்தின் பொருள் முற்றும் உணர்ந்தபின், முற்கூறிய முறையைக் கையாண்டு, தெளிவான நடையில் அளவான வாக்கியங் களை யமைத்துப் பொழிப்புரை வரைதல் வேண்டும். பொருள் கெடாதவகையில், ஒரு நெடுவாக்கியத்தைப் பல குறுவாக்கியங் களாகச் சிதைத்தும், தெளிவு கெடாத வகையில், பல குறுவாக் கியங்களை ஒரு நெடுவாக்கியமாகப் புணர்த்தும் வரையலாம்.

4. நடைபெயர்ப்பு பொழிப்புரையின் சிறப்பியல்களுள் ஒன்றென் பதைத் தவறாக வுணர்ந்து, செ-யுளிலுள்ள சொற்களை யெல்லாம் பொழிப்புரையில் மாற்றிவிடுதல் கூடாது. எக்காலத்தும் செ-யுட்கே சிறப்பாகவுள்ள சொற்களையும் சொல் வடிவுகளையும் மட்டுமே