உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

அகத்தியமா- மாற்றுதல் வேண்டும். பொருள் தெளிவான சொற்களை எக்காரணத்தையிட்டும் மாற்றுதல் கூடாது. அருஞ்சொற் களையும் கீழ் வகுப்பு மாணவரே பொதுவா- மாற்றற்குரியர். மேல் வகுப்பு மாணவர், தத்தம் அறிவிற்குத்தக, சில பல அருஞ் சொற் களை மாற்றாமலே வைத்துக் கொள்ளலாம். சொற்களை மாற்ற வேண்டும் என்பதற்காகவே நிலா என்பதற்குத் திங்கள் என்னும் தென் சொல்லை யும் விழா என்பதற்கு உற்சவம் என்னும் வடசொல்லையும் (பதிலாக) வழங்குதல் கூடாது.

5. பொழிப்புரைக்குப் புறம்பாக, குறிப்புரை வடிவிலாயினும் விளக்கவுரை வடிவிலாயினும் எதுவுமிருத்தல் கூடாது. விளக்க மெல்லாம் பொழிப்புரையின் கூறாகவே யமைந்திருத்தல் வேண்டும். அல்லாக்கால், சரியான பொழிப்புரையாகாது. ஒரு வாக்கியம், குறிப்புரை அல்லது விளக்கவுரை வேண்டுமாறு தெளிவற்றிருப்பின், அதை

மீண்டும் திருத்தி வரைதல் வேண்டும்.

6. நேரல் கூற்றைவிட நேர்கூற்றே தமிழுக்கியல்பாதலின், செ-யுளிலுள்ள நேர்கூற்றுகளை யெல்லாம் அங்ஙனமே பொழிப் புரையில் அமைத்துக்கொள்வது நல்லது.

7. ஒரே முறையில் திருத்தமாக எழுதவியலாத மாணவரெல் லாம், முதன் முறையில் கரட்டு வரைவாக (rough draft) வரைந்து கொண்டு, பின்பு செவ்வைப்படி ( fair copy) எடுத்துக் கொள்ளலாம்.

போலிகை

செ-யுள்

நாரைவிடு தூது

நாரா-! நாரா-! செங்கால் நாரா-! பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன பவளக் கூர்வா-ச் செங்கால் நாரா-!

நீயும்நின் மனைவியும்

தென்றிசைக் குமரி யாடி வடதிசைக்

காவிரி யாட ஏகுவி ராயினெம்

சத்தி முற்றத்து வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லிப்

பாடுபார்த் திருக்குமெம் மனைவியைக் கண்டெங்

கோமான் வழுதி கூடல் மன்றத்து