உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

ஆடை யின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெ-யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇ

அலகுதிர்ந் தன்ன பல்லின னாகிப்

பேழையுள் ளிருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழை யாளனைக் கண்டனம் எனுமே.

பொழிப்புரை

209

(சத்திமுற்றப் புலவர்)

ஏ நாரையே ! பனக்கிழங்கை இரண்டா-ப் பிளந்து வைத்தாற் போன்றதும், பவளம்போற் சிவந்ததுமான, கூரிய அலகையுடைய செங்கால் நாரையே! நீயும் உன் பெட்டையும் தெற்கேயுள்ள குமரி யாற்றில் இரைதேடிய பின் வடக்கேயுள்ள காவிரியாற்றிற்குச் செல்வீர் களாயின்; வழியிலிருக்கும் எம் ஊராகிய சத்திமுற்றத்திலுள்ள ஏரியில் ஒருபொழுது தங்கி, அவ் வூரில் மழையில் நனைந்த சுவரை யுடைய ஒரு கூரைவீட்டில், பல்லியொலிப்பதைச் சகுனமாகக் கவனித் துக் கொண்டிருக்கும் என் மனைவியைக் கண்டு; எம் பாண்டிய வரசனது மதுரைமாநகரில், ஓர் அம்பலத்தில், போர்த்துக்கொள்ள ஒன்றுமில் லாமல் வாடையில் நடுங்கி, கையைக்கொண்டு உடம்பைப் பொத்தி, காலை நெஞ்சில்வைத்து முடக்கிக்கொண்டு, அலகு உதிர்ந்து விடுவது போற் பல் பறையடிக்க, பெட்டிக்குள்ளிருக்கும் பாம்புபோல் குறுமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் உன் ஏழைக் கணவனைப் பார்த் தோம் என்று சொல்லுங்களேன்!

பயிற்சி

பின் வருபவற்றிற்குப் பொழிப்புரை வரைக:

1. சாமிநாதையர் தமிழ்த்தொண்டு

ஊட்டில் லாமல் உள்ளது நோய

இறந்த குழவியை எண்ணி யழல்போல் ஆடிப் பெருக்கில் அளவறுந் தமிழ்நூல்

ஓடிச் சென்றதை உணராத் தமிழர் ஏரண முதலிய எண்ணறுங் கலைநூல் வாரணங் கொண்டதை வழிவழி சொல்லிக் கொன்னே புலம்புதல் என்னே மடமை! கொலம்பசு முதலியோர் கொடுங்கட லோடி நிலம்பல கண்டில ராயினும் நீங்காப்