உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

பின்னோர் அவற்றைப் பின்னே காண்பர் மன்பே ராசான் தென்கலைச் செல்வன் பண்டா ரகனாம் பைந்தமிழ்ப் பெரியோன் சாமிநா தையன் சார்ந்தில னாயின் இற்றைத் தொன்னூல் என்னா யிருக்குமோ! தமிழரை வணங்குந் தமிழ்ப்பெரும் பித்தால் விடுமுறை யெல்லாம் விடுமுறை யின்றி ஊர்தொறும் மனைதொறும் ஓயா தேகித் தானா- வேண்டியும் தக்கார் துணையொடும் பற்பல வகத்திற் பாழ்படக் கிடந்த

தொன்னூ லெல்லாம் பொன்போற் சேர்த்து விறகு தலையன் முறையிற் சுமந்து

வீட்டை யடைந்ததும் ஏட்டைப் பிரித்துச்

சிதலரித் தனவும் சிதர்ந்து போனவும்

மங்கி யிருந்தவும் மாறிக் கிடந்தவும்

பூச்சி துளைத்தவும் புலனா காதவும் பொறையும் பொறுமையும் புரிவிற் பொலியக் கங்குல் பகலா-க் கண்ணொளி மழுங்கப் படித்துப் படிகள் எடுத்துத் திருத்தி

அருஞ்சொற் பொருளும் ஆரா-ச்சிக் குறிப்பும் முதற்குறிப் புரையுடன் முறையா-அச்சிட்

டுதவி யிலனேல் இதுகால் நாமும்

பத்துப் பாட்டைப் பார்த்த லொண்ணுமோ?

எட்டுத் தொகையும் எ-தல் இயலுமோ? சிந்தா மணியொடு சிலம்பு மேகலை சிந்தையி லேனுஞ் சேர்த லாகுமோ? பிறபல நூலும் பெறுதல் கூடுமோ? இத்தகை யோனை அத்தக நினைய

ஊர்தொறும் உடலள வொண்பொற் சிலையும்

உள்ளந் தோறும் உயிருடைச் சிலையும்

நிறுவி யவன்வழி நிற்றல்

தகுவதே யன்றோ தமிழகத் தோரே!

2. யாது மூரே யாவருங் கேளிர்!

யாது மூரே யாவருங் கேளிர்

தீது நன்றும் பிறர்தர வாரா

நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன