உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

சாதலும் புதுவ தன்றே வாழ்த

று

லினிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவி னின்னா தென்றலு மிலமே மின்னொடு வானந் தண்டுளி தலைஇ யானாது

கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்

211

முறைவழிப் படூஉ மென்பது திறவோர் காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்

பெரியோரை வியத்தலு மிலமே

சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.

(புறம்.192)

11. செ-யுட் கதையை உரைநடையில் வரைதல் (Reproduction of a Story Poem)

முன்னுரைக்

குறிப்புகள்

செ-யுட் கதையை உரைநடையில் வரைதலும், பொழிப்புரை வரைவு போன்றதே. ஆகையால், அதற்குக் கூறியவற்றை இதற்குங் கொள்க. ஆனால், உரைநடைக் கதை ஒரு செ-யுளின் பொழிப்புரை யாகவோ நடைபெயர்ப் பாகவோ அமையாமலும், ஒரு செ-யுளி லிருந்து வரையப்பெற்றதென்று தோன்றாமலும், முதன் முறையிலேயே உரைநடையிற் கூறப்பெற்றது போல் இயற்கையாயிருத்தல் வேண்டும்.

செ-யுளில் இடம் நிறைக்க வந்துள்ள சிறு வரணனைகளையும், புலவன் குறிப்புகளையும், உரைநடைக்கதையில் விட்டுவிடலாம். ஆனால், கதை முடிவில், அதன் படிப்பனை அகத்தியமா-க் குறிக்கப் படுதல் வேண்டும். ஒவ்வொரு கதையின் நோக்கமும் ஒரு படிப் பனையை உணர்த்துவதே. படிப்பனை ஓர் உண்மையாகவோ ஒழுக்க விதியாகவோ இருக்கும். அதுவே கதையின் உயிர்நாடியான பகுதி யாகும்.

போலிகை

நன்றியுள்ள சேவகன் செ-யுட் கதை

1. தரையுலகில் இருகண்டம் தழுவுபேரிசியாவில்

உரைபலநற் செல்வமெல்லாம் ஒருங்குடைய நற்பேற்றுத் தரையொருவன் ஐங்காதத் தொலைவிலுள்ள உறவினரைக் கரையறுமெ-க் காதலினால் கண்டுவரக் கருதினனால்.